ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில்
ஏ. ஜே. ஜான், ஆனாப்பரம்பில் | |
|---|---|
| திருவிதாங்கூர் - கொச்சி முதலமைச்சர் | |
| பதவியில் 12 மார்ச்சு 1952 – 16 மார்ச்சு 1954 | |
| ஆளுநர் | சித்திரைத் திருநாள் பலராம வர்மா (இராஜ்பிரமுக்) |
| தொகுதி | பூஞ்சார் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 18 சூலை 1893 தலயோலப்பரம்பு, வைக்கம், |
| இறப்பு | 1 அக்டோபர் 1957 (அகவை 64) சென்னை, இந்தியா |
| அரசியல் கட்சி | திருவிதாங்கூர் மாநில காங்கிரசு (1948இல் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது) |
| வாழிடம் | வைக்கம், திருவனந்தபுரம் |
| சமயம் | சிரியோ-மலபார் கத்தோலிக்கம் |
| {{{blank1}}} | Fr. G. Thalian. "`A. J. John, Anaparambil' in `The Great Archbishop Mar Augustine Kandathil, D. D.: the Outline of a Vocation'". D. C. Kandathil, NYU. Archived from the original on 2012-03-01. Retrieved 2007-12-23. |
ஆனாப்பரம்பில் ஜோசஃப் ஜான் (Anaparambil Joseph John, சூலை 18, 1893 – அக்டோபர் 1, 1957) திருவிதாங்கூரைச் சேர்ந்த ஓர் விடுதலை இயக்கப் போராளியும் அரசு அதிகாரியும் ஆவார். திருவிதாங்கூர்-கொச்சி இராச்சியத்தின் முதலமைச்சராகவும் சென்னை மாகாணத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தவர்.
திருவிதாங்கூர் இராச்சியத்தில் வைக்கம் அண்மையில் தலயோலப்பரம்பில் பிறந்த ஜான் ஓர் சட்ட அறிஞர்.
வைக்கத்திலிருந்து திருவிதாங்கூர் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றுள்ளார்.
1947இல், திருவிதாங்கூர் மகாராசா சட்டவமைப்பு மன்றத்தை அறிவித்தார். இந்த மன்றம் 1948இல் கூடிய முதல் கூட்டத்திற்கு ஜான் தலைமை ஏற்றார். 1949இல் நிதி,வருமானத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1951ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக பூஞ்சார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் முதலமைச்சராக மார்ச்சு 1952 முதல் மார்ச்சு 1954 வரை ஆட்சியில் இருந்தார். இந்த மாநிலத்தின் கடைசி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் மாநில சீரமைப்புகளுக்குப் பின்னர் தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்றார்.