விஷ்ணுராம் மேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஷ்ணுராம் மேதி (Bishnuram Medhi, அசாமிய மொழி: বিষ্ণুৰাম মেধি, பிஷ்ணுராம் மேதி) (ஏப்ரல் 24, 1888–சனவரி 21, 1981) அசாமின் முதலமைச்சராக 1950 முதல் 1957 வரை[1] பணியாற்றிய இந்திய அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரரும் ஆவார். இவர் தமிழக ஆளுநராக சனவரி 1958 முதல் மே 1964 வரை பணியாற்றி உள்ளார். [2]

இளமை வாழ்க்கை[தொகு]

விஷ்ணுராம் மேதி குவஹாத்தி அருகிலுள்ள அயோ என்ற சிற்றூரில் சோனாராம், அலேகி என்ற பெற்றோருக்கு வறுமை மிகுந்த விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 24, 1888இல் பிறந்தார். குவகாத்தியில் உள்ள காட்டன் காலேசியேட்டு பள்ளியில் தமது மெட்றிகுலேசன் படிப்பை 1905இல் முடித்தார்.[3] பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் கொல்கத்தாவிலுள்ள மாகாணக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் பட்ட மேற்படிப்பை கரிம வேதியியலில் தாக்கா பல்கலைக்கழகத்திலிருந்தும் முடித்தார். பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு 1914இல் வழக்குரைநர் அவையி்ல் உறுப்பினரானார்.

இந்திய விடுதலை இயக்கம்[தொகு]

விஷ்ணுராம் இந்திய தேசிய காங்கிரசில் 1920களில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1926இல் பாண்டுவில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டு வரவேற்புக் குழுவில் இணைச் செயலாளராக பணியாற்றினார். 1930இல் அசாமிய மாநில காங்கிரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

விடுதலைக்குப் பிந்தைய அரசியல்[தொகு]

1935இல் மாநில சுயாட்சி வழங்கப்பட்டபோது கோபிநாத் போர்டோலாய் அமைச்சரவையில் விஷ்ணுராம் அமைச்சராகப் பணியாற்றினார். 1950இல் அசாமின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 வரை இப்பதவியில் நீடித்தார். [5] 1958 முதல் 1964 வரை சென்னை மாநில ஆளுநராக பணியாற்றினார்.[5]

இறப்பு[தொகு]

விஷ்ணுராம் மேதி தமது 92ஆம் அகவையில் சனவரி 21, 1981இல் இயற்கை எய்தினார்.[6]

நினைவு அஞ்சற்றலை[தொகு]

விஷ்ணுராம் மேதி நினைவாக இந்திய அஞ்சல் துறை 24.4. 1989 ல் அஞ்சற்றலை வெளியீடு செய்தது.[7][8][9]

மேற்சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணுராம்_மேதி&oldid=3603923" இருந்து மீள்விக்கப்பட்டது