பி. சி. அலெக்சாண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. சி. அலெக்சாண்டர்
மகாராட்டிர ஆளுநர்
பதவியில்
12 சனவரி 1993 – 13 சூலை 2002
முன்னவர் சி. சுப்பிரமணியம்
பின்வந்தவர் மொகமது பசல்
தமிழக ஆளுநர்
பதவியில்
17 பெப்ரவரி 1988 – 24 மே 1990
முன்னவர் சுந்தர்லால் குரானா
பின்வந்தவர் சர்தார் சுர்ஜித்சிங் பர்னாலா
கோவா ஆளுநர்
பதவியில்
19 சூலை 1996 – 15 சனவரி 1998
முன்னவர் ரோமேஷ் பண்டாரி
பின்வந்தவர் டி. ஆர். சதீஷ் சந்திரன்
தனிநபர் தகவல்
பிறப்பு (1921-03-20)20 மார்ச்சு 1921
கேரளா, இந்தியா
இறப்பு 10 ஆகத்து 2011(2011-08-10) (அகவை 90)
சென்னை, இந்தியா
தேசியம் இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள் கேரளப் பல்கலைக்கழகம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தொழில் அரசு குடியியல் அதிகாரி
அரசியல்வாதி
பொதுநிர்வாகம்
சமயம் கிறித்தவம்

முனைவர். படிஞ்ஞாரெதலக்கல் செரியன் அலெக்சாண்டர் (Padinjarethalakal Cherian Alexander, மார்ச்சு 20, 1921 - ஆகத்து 10, 2011) ஓர் முன்னாள் இந்தியக் குடியுரிமை பணியாளரும் பின்பு அரசியல்வாதியாக விளங்கியவருமாவார். இந்திய ஆளுநராக தமிழகத்தில் 1988 முதல் 1990 வரையும் மகாராட்டிரத்தில் 1993 முதல் 2002 வரையும் பணியாற்றி யுள்ளார். மகாராட்டிர ஆளுநராகப் பணியாற்றியக் காலத்தில் கோவாவின் ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக 1996 முதல் 1998 வரை மேற்பார்த்துள்ளார். 29 சூலை 2002 முதல் 2 ஏப்ரல் 2008 வரை மகாராட்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.[1]

அவரது குடியுரிமைப்பணிக் காலத்தில் வணிகத்துறை அமைச்சகத்திலும் பல ஐக்கிய நாடுகள் செயலகத்திலும் சிறப்புற பணியாற்றியுள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முதன்மை செயலராக பணியாற்றிய காலமும் குறிப்பிடத்தக்கது.

தனிவாழ்வு[தொகு]

அவரது சொந்த ஊர் கேரள மாநிலம் மாவேலிக்கரா ஆகும். தனது ஓய்விற்குப் பின்பு சென்னை கோட்டூர்புரம் அருணாச்சலம் தெருவில் வசித்திருந்தார். 5 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முகப்பேரில் உள்ள மதராஸ் மெடிகல் மிசன் மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்தார். நோய் தீவிரமடைந்ததை அடுத்து சிகிட்சை பலனின்றி ஆகத்து 10, 2011 அன்று காலையில் மரணமடைந்தார். அவருக்கு அக்கம்மா என்ற மனைவியும், ஜவஹர் அலெக்சாண்டர், அசோக் அலெக்சாண்டர் என்ற மகன்களும், குமாரி, ரஜினி ஆகிய மகள்களும் உள்ளனர்.[2]

எழுத்துக்கள்[தொகு]

பல ஆய்வுக் கட்டுரைகளை பதிப்பித்துள்ள அலெக்ஸாண்டர் கீழ்வரும் ஆங்கில நூல்களை வெளியிட்டுள்ளார்:

  • இந்திராகாந்தியுடனான எனது ஆண்டுகள் - "My Years with Indira Gandhi"
  • மக்களாட்சியின் ஆபத்துக்கள் - "The Perils of Democracy"
  • புதிய ஆயிரவாண்டில் இந்தியா - "India in the New Millennium"

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சி._அலெக்சாண்டர்&oldid=3423126" இருந்து மீள்விக்கப்பட்டது