இந்தியக் குடிமைப் பணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தியக் குடியுரிமைப் பணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியக் குடிமைப் பணி அல்லது ஐ.சி.எஸ் (Indian Civil Service) பிரித்தானிய இந்தியாவை மேலாண்மைச் செய்ய காலனிய அரசால் ஏற்படுத்தப்பட்ட குடிமைப் பணியாகும். 1886-இல் தொடங்கப்பட்ட இது அதிகாரப்பூர்வமாக வேந்திய குடிமைப் பணி அல்லது பிரித்தானிய இந்தியாவின் குடிமைப் பணி என்று அழைக்கப்பட்டது.[1]

தோற்றம்[தொகு]

1757-ம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பெனிக்கும், வங்காள மன்னன் சிராச் உத் தவ்லாவுக்கும் இடையில் நடந்த பிளாசிப் போர், 1764-இல் நடந்த பக்சார் சண்டை அடுத்து, தென்னாட்டில் நடந்த கர்னாடகா போர் ஆகியவற்றில் ஆங்கிலேயப் படையினர் வெற்றி பெற்றனர்.[2]

பிரித்தானிய இந்தியாவின் ஆளுகையின்கீழ் வந்த போர்ப் பகுதிகளில் உள்ள நிலத்தை மேலாண்மைச் செய்து, வரி வசூல் செய்து, வருமானம் ஈட்டக் கொண்டு வரப்பட்டதுதான், இந்திய குடிமைப் பணி அதிகாரிகளின் கடமை ஆகும். இந்தப் பணிகளில் தேர்ச்சி பெற்ற வெள்ளைக்காரர்களுக்கு, இந்தியாவில் உயர் பதவிகள் கொடுக்கப்பட்டன. பின்னாளில், இப்பணியில் நேர்மையான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர், ஆங்கிலேயப் பிரபு காரன்வாலிஸ் ஆவார். அதற்குப் புதிய சட்டங்களை வகுத்துக் கொடுத்தார்

உறுப்பினர்கள்[தொகு]

தொடக்கத்தில் இதன் முதன்மை உறுப்பினர்கள் அனைவரும் பிரித்தானியர்களே. பின் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மெல்லக் கூடியது. 1914-ஆம் ஆண்டில் 5% உறுப்பினர்கள் இந்தியர்களாக இருந்தனர். 1942 இல் 597 இந்திய உறுப்பினர்களும் 588 பிரித்தானிய உறுப்பினர்களும் இருந்தனர். 1947-இல் இந்தியா விடுதலை பெற்றபின்னர் பிரித்தானிய உறுப்பினர்களில் மிகப் பெரும்பாலானோர் தாயகம் திரும்பி விட்டனர். இந்தியப் பிரிவினைக்குப் பின், இவ்வமைப்பு இந்தியக் குடியரசின் குடிமைப் பணி, பாகிஸ்தான் குடிமைப் பணி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]