வினீத் கோத்தாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு முன்னாள் நீதியரசர்
வினீத் கோத்தாரி
பொறுப்பு தலைமை நீதிபதி குஜராத் உயர் நீதிமன்றம்
பதவியில்
31 ஆகத்து 2021 – 1 செப்டம்பர் 2021
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி குஜராத் உயர் நீதிமன்றம்
பதவியில்
4 சனவரி 2021 – 30 ஆகத்து 2021
பரிந்துரைப்புஎஸ். ஏ. பாப்டே
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி, மதராசு உயர் நீதிமன்றம்
பதவியில்
23 நவம்பர் 2018 – 3 சனவரி 2021
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றம்
பதவியில்
18 ஏப்ரல் 2016 – 22 நவம்பர் 2018
பரிந்துரைப்புடி. எஸ். தாக்கூர்
நியமிப்புபிரணாப் முகர்ஜி
நீத்பதி, இராஜஸ்தான் உயர் நீதிமன்றம்
பதவியில்
13 ஜூன் 2005 – 17 ஏப்ரல் 2016
பரிந்துரைப்புஇரமேசு சந்திர லகோத்தி
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 செப்டம்பர் 1959
முன்னாள் கல்லூரிஜோத்பூர் பல்கலைக்கழகம்

வினீத் கோத்தாரி (Vineet Kothari)(பிறப்பு: செப்டம்பர் 2, 1959) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் குஜராத் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி ஆவார். இவர் மதராசு உயர்நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்றம் மற்றும் இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார்.[1]

கல்வி[தொகு]

பட்டய கணக்காளர்களின் சைனக் குடும்பத்தில் பிறந்தவர் கோத்தாரி.[2] சோத்பூர் பலகலைக்கழகத்தில் 1978ஆம் ஆண்டு இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். 26 ஆண்டுகளாகப் பட்டய கணக்காளராகப் பயிற்சி பிறகு, இவர் தனித்துவத்துடன் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் 15 ஆண்டுகளாக (1989 முதல் 2004 வரை) பணியாற்றினார். இவருடைய மூத்த சகோதரர் திரு. பி. எம். கோத்தாரி வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் உறுப்பினராக இருந்தார்.

நீதிபதி பணி[தொகு]

கோத்தாரி 13 ஜூன் 2005 அன்று இராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். ஏப்ரல் 18, 2016 அன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். நவம்பர் 23, 2018 அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். 4 ஜனவரி 2021 அன்று குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பின்னர் பொறுப்பு தலைமை நீதிபதியாகக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் 31 ஆகத்து 2021 நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதியாக பணியாற்றிய விக்ரம் நாத் இந்திய உச்ச நீதிமன்றம் நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் இவர் இந்தப் பொறுப்பினை ஏற்றார். பின்னர் கோத்தார் செப்டம்பர் 1, 2021 அன்று வயது மூப்பின் காரணமாகப் பணி ஓய்வு பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Emmanuel, Meera (21 September 2019). "Justice Vineet Kothari appointed Acting Chief Justice of Madras High Court". Bar & Bench. https://www.barandbench.com. 
  2. "@mycastory.com: Dr.Justice Vineet Kothari Judge, Rajasthan High Court". #mycastory (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-03-05. Archived from the original on 2019-10-02. பார்க்கப்பட்ட நாள் 2019-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினீத்_கோத்தாரி&oldid=3571934" இலிருந்து மீள்விக்கப்பட்டது