விஜய தஹில் ரமணி
விஜ்யா கம்லேஷ் தஹில்ரமானி ( VK Tahilramani 1958, அக்டோபர் 3) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாவார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது பெண் தலைமை நீதிபதியாவார். சிலைகடத்தல் வழக்குகளை நீர்த்துப்போகச்செய்ய லஞ்சம் பெற்றதால் கிடைத்த பணிமாற்றத்தை மறுத்து பதவியை துறந்தார்
வாழ்க்கை
[தொகு]தஹில் ரமணி 1958 இல் மகாராட்டிர மாநிலத்தில் பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த சிந்தி அகதி குடும்பத்தில் பிறந்தவர்[1].
தொழில்முறை வாழ்க்கையும், ஊழல்களும்
[தொகு]1982இல் வழிக்கறிஞராக பதிவுசெய்து, மும்பை மற்றும் கோவாவின் கீழ் நீதிமன்றங்களில் வழங்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். குடிமை மற்றும் குற்றவியல் வழக்குகளில் தேர்ச்சி பெற்ற இவர் மும்பை கீழ் நீதிமன்றங்களில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டார். பின்னர் மகாராட்டிர அரசின் அரசுத் தரப்பு வழக்கறிஞராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். இந்நிலையில் 2001ஆம் ஆண்டு சூன் மாதம் 26ஆம் நாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 17 ஆண்டுகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த அவர்,[2] பொறுப்புத் தலைமை நீதிபதியாகவும் பதவிவகித்தார். இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய போது 2017ஆம் ஆண்டு பில்கிஸ் பானு பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் .[3] இந்நிலையில் தஹில் ரமணியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2018 ஆகத்து 12 அன்று பதவியேற்றார்.[4] இவரை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் 2019 ஆகத்து 28 ஆம் தேதி முடிவு செய்தது.[5] இதை மறுபரிசீலனை செய்யுமாறு தஹில் ரமணி விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டாத்ததால் அதிருப்தி அடைந்த தஹில் ரமணி தன் பதவியை விட்டு விலகினார்.[6]உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய், இவர் பிரபல தொழிலதிபர் டி.வி.எஸ் நிறுவன வேணு சீனிவாசன் மேல் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடுத்திருந்த சிலை கடத்தல் வழக்குகளை நீர்ந்துப்போகச்செய்ய பெற்ற கோடிக்கணக்கான லஞ்ச முறைகேடுகளை நடுவண் புலனாய்வுச் செயலகம் மற்றும் இந்திய உளவுத்துறை தனக்கு சுட்டியதால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தன் நினைவு புத்தகத்தில் எழுதியுள்ளார்[7].
இந்த நிலையில் தஹில் ரமானி மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை இந்திய உளவு அமைப்பான ஐ.பி. கூறியுள்ளது. சென்னையில் செம்மஞ்சேரி மற்றும் திருவிடந்தை ஆகிய இடங்களில் தஹில் ரமானி 2 அடுக்குமாடி வீடுகளை கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வாங்கி இருக்கிறார்.இதன் பின்னணியில் முறைகேடு இருப்பதாக ஐ.பி. குற்றம் சாட்டி இருக்கிறது. இதுபற்றி 5 பக்க அறிக்கையை ஐ.பி. உளவு அமைப்பு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் வழங்கி இருக்கிறது.இதையடுத்து நீதிபதி ரஞ்சன் கோகாய் இதுசம்பந்தமாக விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உள்ளது. தஹில் ரமானி வீடு வாங்கிய இரு இடங்களிலும் லோரியன் டவர் நிறுவனம் அடுக்குமாடி வீடுகளை கட்டி விற்பனைக்கு விற்றது. அதிலிருந்து இரு வீடுகளும் வாங்கப்பட்டுள்ளன.
பணப்பரிமாற்றங்களில் பல்வேறு சந்தேகம்
[தொகு]இதன் மதிப்பு ரூ.3 கோடியே 18 லட்சம்.இதில் ரூ.1 கோடியே 62 லட் சத்தை எச்.டி.எப்.சி. வங்கி கடன் மூலம் செலுத்தி உள்ளார். மீதி ரூ.1 கோடியே 56 லட்சம் தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கி உள்ளார்.இந்த பணப்பரிமாற்றம் தனது குடும்பத்தினரின் 6 வங்கி கணக்குகள் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. 3 கணக்குகள் தனது கணவருடன் உள்ள கூட்டு வங்கி கணக்கு ஆகும். ஒரு கணக்கு மகனுடைய கூட்டு கணக்கு, மற்றொரு கணக்கு தாயாருடைய கூட்டு கணக்கு. மற்றொன்று தனது சம்பள வங்கி கணக்கு.அந்த 6 வங்கி கணக்குகளில் இருந்து ரு.1 கோடியே 61 லட்சம் மும்பை மகிமில் உள்ள தனது வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரூ.18 லட்சம் தஹில் ரமானி மற்றும் அவரது தாயார் கூட்டு கணக்குக்கு வந்துள்ளது.ஒரு மாதத்தில் அந்த பணம் மற்றொரு கூட்டு கணக்குக்கு மாற்றப்பட்டிருக்கிறது.இந்த பணப்பரிமாற்றங்களில் பல்வேறு சந்தேகம் இருப்பதாக ஐ.பி. குற்றம் சாட்டி உள்ளது.
சிலைக் கடத்தல் தடுப்பு விசாரணை சிறப்பு அமர்வை கலைத்ததாக புகார்
[தொகு]தமிழகத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணை மன்றத்தை கலைத்த தன் பின்னணியில் முறைகேடு நடந்ததாகவும் அதன் அடிப்படையில் பணம் வந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் தொடர்பாக 2018-ம் ஆண்டு கோர்ட்டு சிறப்பு விசாரணை மன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி மகாதேவன் தலைமையிலான இந்த மன்றம் சிலை கடத்தல் தொடர்பாக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இதன் விசாரணை தலைவராக நியமிக்கப்பட்டிருந்த பொன்.மாணிக்கவேலை முடுக்கி விட்டு பல சிலை கடத்தல்களை கண்டுபிடித்தது. இந்த நேரத்தில் சிலை கடத்தல் சிறப்பு விசாரணை மன்றத்தை அப்போதைய தலைமை நீதிபதியான தஹில் ரமானி கலைத்து உத்தரவிட்டார். இதன் பின்னணியில் தான் தவறு நடந்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Most billionaires in India today once resided in Pakistan's Sindh - Daily Times". web.archive.org. 2020-05-07. Archived from the original on 2020-05-07. பார்க்கப்பட்ட நாள் 2022-03-16.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்". செய்தி. இந்து தமிழ். 4 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2018.
- ↑ "சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா". தீக்கதிர். 8 செப்டம்பர் 2019. http://www.theekkathir.in/epaper#. பார்த்த நாள்: 9 செப்டம்பர் 2019.
- ↑ "உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமானி பதவியேற்பு". செய்தி. இந்து தமிழ். 12 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2018.
- ↑ "சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல்- கொலீஜியம் பரிந்துரை". செய்தி. oneindia. 4 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி இராஜினாமா!". செய்தி. athavannews. 7 செப்டம்பர் 2019. Archived from the original on 2019-09-17. பார்க்கப்பட்ட நாள் 8 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "சிலைக் கடத்தல் தடுப்பு விசாரணை அமர்வை கலைத்ததாக புகார் : ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு". www.dinakaran.com (in ஆங்கிலம்). Archived from the original on 2022-03-16. பார்க்கப்பட்ட நாள் 2022-03-16.