இந்திரா பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திரா பானர்ஜி (Indira Banerjee, 1957, செப்டம்பர் 24) என்பவர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாவார். முன்னதாக இவர் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தார்.[1]

நீதியரசர்
இந்திரா பானர்ஜி
Justice Indira Banerjee.jpg
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
07 ஆகஸ்ட் 2018
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
பதவியில்
05 ஏப்ரல் 2017 – 06 ஆகஸ்ட் 2018
நியமித்தவர் பிரணப் முகர்ஜி
முன்னவர் சஞ்சய் கிஷன் கவுல்
பின்வந்தவர் விஜய தஹில் ரமணி
தில்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதி
பதவியில்
08 ஆகஸ்ட் 2016 – 04 ஏப்ரல் 2017
நியமித்தவர் பிரணப் முகர்ஜி
தனிநபர் தகவல்
பிறப்பு 24 செப்டம்பர் 1957 (1957-09-24) (அகவை 63)

வாழ்க்கை[தொகு]

இவர் மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் 1957 இல் பிறந்தவர். இவர் கொல்கத்தாவிலுள்ள லொரெட்டோ ஹவுசில் பள்ளிப்படிப்பை முடித்து, இளங்கலைப் படிப்பை அங்குள்ள பிரசிடன்சி கல்லூரியிலும், சட்டப்படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் முடித்தார். 1983 இல் பார்கவுன்சிலில் பதிவு செய்து, வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கி 17 ஆண்டுகள் தொடர்ந்தார். 2002 பெப்ரவரி 5 ஆம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 14 ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 39வது தலைமை நீதிபதியாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதியாகவும் 2017, ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். பின்னர் இவர் 2018 ஆகத்து 7 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ் கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது: தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேச்சு". செய்தி. தி இந்து (2017 ஏப்ரல் 5). பார்த்த நாள் 9 ஏப்ரல் 2017.
  2. "ஆகஸ்ட் 7-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு". செய்தி. தினகரன் (2018 ஆகத்து 4). பார்த்த நாள் 6 ஆகத்து 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_பானர்ஜி&oldid=2967410" இருந்து மீள்விக்கப்பட்டது