உள்ளடக்கத்துக்குச் செல்

சஞ்சீவ் கண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சீவ் கண்ணா
Sanjiv Khanna
நீதிபதி சஞ்சீவ் கண்ணா
51வது இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
11 நவம்பர் 2024  13 மே 2025
நியமிப்புதிரௌபதி முர்மு
முன்னையவர்தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட்
நீதிபதி-இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில்
18 சனவரி 2019  10 நவம்பர் 2024
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி-தில்லி உயர் நீதிமன்றம்
பதவியில்
24 சூன் 2005  17 சனவரி 2019
பரிந்துரைப்புஇரமேஷ் சந்திர லகோதி
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 மே 1960 (1960-05-14) (அகவை 66)
புது தில்லி, இந்தியா
முன்னாள் மாணவர்தில்லி பல்கலைக்கழகம்

சஞ்சீவ் கண்ணா (Sanjiv Khanna, பிறப்பு: 14 மே 1960) இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆவார். இவர் தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். இவரின் தந்தை தேவ் ராஜ் கண்ணாவும் நீதிபதி பதவியினை வகித்தவர் ஆவார்.

இளமையும் கல்வியும்

[தொகு]

சஞ்சீவ் கண்ணா 1977-ஆம் ஆண்டு தில்லியின் பாரகாம்பா சாலையில் உள்ள மாடர்ன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள தூய இசுடீபன் கல்லூரியில் 1980-ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு, தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இவரின் தந்தை நீதிபதி தேவ் ராஜ் கண்ணா 1985-இல் தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரின் தாயார் சரோஜ் கண்ணா தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள சீமாட்டி சிறீராம் கல்லூரியில் இந்தி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

சஞ்சீவ் கண்ணா உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹன்ஸ் ராஜ் கண்ணாவின் மருமகன் ஆவார்.[1][2][3]

நீதிபதி பணி

[தொகு]

சஞ்சீவ் கண்ணா 1983-ஆம் ஆண்டு தில்லி வழக்குரைஞர் கழகத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து பயிற்சி செய்துவந்தார். 20 பிப்ரவரி 2006 அன்று தில்லி உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு 18 சனவரி 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். தலைமை நீதிபதி தனஞ்சய சந்திரசூட் ஓய்வு பெற்ற பிறகு, 11 நவம்பர் 2024 முதல் இந்தியத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். 13 மே 2025 அன்று இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CJ & Sitting Judges". Delhi High Court. Retrieved 12 January 2019.
  2. "SC recommends names of Justices Maheshwari, Sanjiv Khanna as top court judges". தி எகனாமிக் டைம்ஸ். Retrieved 12 January 2019.
  3. "7 Next CJIs". Supreme Court Observer. Archived from the original on 28 December 2021. Retrieved 24 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சீவ்_கண்ணா&oldid=4458719" இலிருந்து மீள்விக்கப்பட்டது