அ. சி. ஓகா
மாண்புமிகு நீதிபதி அ. சி. ஓகா | |
---|---|
![]() | |
நீதிபதி, இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 31 ஆகத்து 2021 | |
முன்மொழிந்தவர் | என். வி. இரமணா |
நியமித்தவர் | ராம் நாத் கோவிந்த் |
தலைமை நீதிபதி கர்நாடக உயர் நீதிமன்றம் | |
பதவியில் 10 மே 2019 – 30 ஆகத்து 2021 | |
முன்மொழிந்தவர் | ரஞ்சன் கோகோய் |
நியமித்தவர் | ராம் நாத் கோவிந்த் |
முன்னவர் | லிங்கப்பா நாராயண சாமி (செயல்) |
பின்வந்தவர் | சதீசு சந்திர சர்மா (செயல்) |
நீதிபதி, பம்பாய் உயர் நீதிமன்றம் | |
பதவியில் 29 ஆகத்து 2003 – 9 மே 2019 | |
முன்மொழிந்தவர் | வி. நா. கரே |
நியமித்தவர் | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 25 மே 1960 இந்தியா |
தேசியம் | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மும்பை பல்கலைக்கழகம் |
அபய் சிறீனிவாசு ஓகா (A. S. Oka)(பிறப்பு 25 மே 1960) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். இவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி[1] மற்றும் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார்.
கல்வி[தொகு]
ஓகா மே 25, 1960-ல் பிறந்தார். இவர் இளம் அறிவியல் மற்றும் சட்டப் படிப்பினை மும்பைப் பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்ன்ர் ஓகா 28 ஜூன் 1983 அன்று வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில், மேல்முறையீடு, அரசியலமைப்பு மற்றும் சேவை விஷயங்களில் 19 ஆண்டுகளாகப் பணியாற்றினார்.[2]
நீதிபதியாக[தொகு]
ஓகா, 29 ஆகத்து 2003 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் நவம்பர் 12, 2005 அன்று நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 30 ஏப்ரல் 2019 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 10 மே 2019 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார்.[1] இவர் 26 ஆகத்து 2021 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று, 31 ஆகத்து 2021 அன்று பதவியேற்றார்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Orders of appointment of Shri Justice A S Oka, Judge of Bombay HC as CJ Karanataka HC (30.04.2019)". 30 April 2019. http://doj.gov.in/sites/default/files/Orders%20of%20appointment%20of%20Shri%20Justice%20A%20S%20Oka%2C%20Judge%20of%20Bombay%20HC%20as%20CJ%20Karanataka%20HC.pdf.
- ↑ "Hon'ble Mr. Justice Abhay Shreeniwas Oka". http://karnatakajudiciary.kar.nic.in/bio_data/former_judges/asoj.htm.
- ↑ "Request Rejected". https://doj.gov.in/sites/default/files/Orders%2520of%2520appointment%2520of%2520%2520Shri%2520Justice%2520Abhay%2520Shreeniwas%2520Oka%252C%2520%2520Chief%2520Justice%2520of%2520the%2520Karnataka%2520High%2520Court%252C%2520to%2520be%2520a%2520Judge%2520of%2520the%2520SCI%2520%252826.08.2021%2529.pdf.