உள்ளடக்கத்துக்குச் செல்

காந்தா குமாரி பட்நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தா குமாரி பட்நகர்
பிறப்பு1929/1930
இறப்பு13 ஆகஸ்ட் 2011 (வயது 81)
உதய்பூர்
அறியப்படுவதுஉயர் நீதிமன்ற நீதிபதி
ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர்

காந்தா குமாரி பட்நகர் (Kanta Kumari Bhatnagar)[1] (1930கள் - 13 ஆகஸ்ட் 2011) இந்தியாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் பெண் நீதிபதியும், ஆர்வலருமாவார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முதல் பெண் நீதிபதி ஆவார். மேலும் பட்நகர் ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.[2]

இவர் ராஜஸ்தானின் முக்கிய பெண் நீதிபதிகளுள் ஒருவராகவும் இருந்தார்.

சுயசரிதை

[தொகு]

பட்நகர் 1968 இல் ராஜஸ்தானில் நீதிபதியாகப் பணியாற்றினார்.[2] 1992 ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆனார்.[2] காந்தா குமாரி பட்நகர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய முதல் பெண் நீதிபதியாக,[3] சுமார் ஐந்து மாதங்கள் பதவி வகித்தார்.[4]

பட்நகர் 2000 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவரானார்.[1] 13 ஆகஸ்ட் 2011 அன்று உதய்பூரில் மாரடைப்பால் 81 வயதில் காந்தா குமாரி பட்நகர் இறந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Former Chairman & Members". Rajasthan State Human Rights Commission. Archived from the original on 20 May 2015. Retrieved 30 July 2017.
  2. 1 2 3 4 "Former Madras CJ passes away" (in en). The Hindu. 15 August 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/former-madras-cj-passes-away/article2358322.ece.
  3. "New CJ of Madras HC sworn in; governor, CM present" (in en-in). Eenadu English Portal. 5 April 2017 இம் மூலத்தில் இருந்து 8 ஜனவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180108120414/http://www.eenaduindia.com/states/tamil-nadu/2017/04/05114152/New-CJ-of-Madras-HC-sworn-in-governor-CM-present.vpf.
  4. Subramanil, A. (30 June 2017). "Madras High Court gets all-woman first bench for 1st time in 135 years - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/chennai/madras-high-court-gets-all-woman-first-bench-for-1st-time-in-135-years/articleshow/59379229.cms.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தா_குமாரி_பட்நகர்&oldid=4463627" இலிருந்து மீள்விக்கப்பட்டது