உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளப்பட்டி சடையக் கவுண்டர் கைலாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பள்ளப்பட்டி சடைய கவுண்டர் கைலாசம் (Palapatti Sadaya Goundar Kailasam)(12 செப்டம்பர் 1915-10 ஆகஸ்ட் 1986) என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார்.[1]

கல்வி[தொகு]

கைலாசம் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார். 1935-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் தாவரவியலில் இளநிலையில் தேர்ச்சி பெற்றார். 1937-ல், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். இவர் 1965-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் சில நாட்கள் மாநில அரசுத் தலைமை வழக்கறிஞராக சிறிதுகாலம் பணியாற்றினார்.

நீதிபதி பணி[தொகு]

கைலாசம் 20 அக்டோபர் 1960-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதி ஆனார். ஏப்ரல் 8, 1976-ல் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[2] நீதிபதி கைலாசம் 1977-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் செப்டம்பர் 12, 1980 அன்று பணி ஓய்வு பெற்றார்.[3]

குடும்பம்[தொகு]

நீதியரசர் கைலாசம், தமிழ் கவிஞர் சௌந்தர கைலாசத்தினை மணந்தார். இவருடைய மகள் நளினி ஆவார். இவர் இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவியாவார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Stamp released in memory of P S Kailasam, former judge of Supreme Court of India". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2015-09-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
  2. "Madras High Court | Former Chief Justices". www.hcmadras.tn.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
  3. Judges of the Supreme Court of India: 1950–1989.
  4. "Tamil poet, orator Soundara Kailasam passes away". https://www.thehindu.com/news/national/tamil-nadu/Tamil-poet-orator-Soundara-Kailasam-passes-away/article15788026.ece. 
  5. "Poet Soundara Kailasam is no more". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.