அவரை
அவரை Lablab | |
---|---|
அவரைக் கொத்தும், பூவும் காயும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fabales
|
குடும்பம்: | பபேசியே (Fabaceae)
|
பேரினம்: | இலபிலாபு (Lablab)
|
இனம்: | L. purpureus
|
இருசொற் பெயரீடு | |
Lablab purpureus (L.) Robert Sweet (botanist) | |
வேறு பெயர்கள் [1] | |
Dolichos lablab L. |
உணவாற்றல் | 209 கிசூ (50 கலோரி) |
---|---|
9.2 g | |
0.27 g | |
2.95 g | |
உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
தயமின் (B1) | (5%) 0.056 மிகி |
ரிபோஃபிளாவின் (B2) | (7%) 0.088 மிகி |
நியாசின் (B3) | (3%) 0.48 மிகி |
இலைக்காடி (B9) | (12%) 47 மைகி |
உயிர்ச்சத்து சி | (6%) 5.1 மிகி |
கனிமங்கள் | அளவு %திதே† |
கல்சியம் | (4%) 41 மிகி |
இரும்பு | (6%) 0.76 மிகி |
மக்னீசியம் | (12%) 42 மிகி |
மாங்கனீசு | (10%) 0.21 மிகி |
பாசுபரசு | (7%) 49 மிகி |
பொட்டாசியம் | (6%) 262 மிகி |
துத்தநாகம் | (4%) 0.38 மிகி |
Link to USDA Database entry Cooked, boiled, drained, without salt | |
| |
†சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் |
அவரை (ⓘ) என்பது இருபுற வெடிக்கனி அல்லது லெகூம், பெபேசி குடும்ப வகையைச்சார்ந்த பயன்மிக்க ஒரு கொடிவகை நிலத்திணை(தாவரம்) ஆகும்.[2] இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி ஆகும். இதன் காயே அவரைக்காய் எனப்படுகிறது. இக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும்.[3] இதில் புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). இதில் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus) ஆகும்.[4] இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (Fabaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு. மொச்சை அவரை என்னும் வகையின் விதைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாக கருதப்படுகிறது (நூல் துணை).
பிற மொழிகளில் அவரையின் பெயர்
[தொகு]அவரைகள் பட்டியல்
[தொகு]- அவரை - bean
- மாத அவரை – moth bean
- பட்டாணி – chick pea
- கெளபி
- பயத்தங்காய்
- சோயா அவரை
- கொத்தவரை – en:Parkia speciosa
- பச்சை அவரை
இன்னும் சில வகைகள்
[தொகு]ஞா. தேவநேயப் பாவாணர் அவரையைப் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.
- ஆட்டுக் கொம்பவரை
- ஆரால் மீனவரை
- ஆனைக் காதவரை
- கணுவவரை
- கொழுப்பவரை
- கோழியவரை
- சிவப்பவரை
- சிற்றவரை
- தீவாந்தர வவரை
- நகரவரை
- பாலவரை
- பேரவரை
- முறுக்கவரை
- கப்பல் அவரை
- காட்டவரை
- வீ ட்டவரை
- சீமையவரை
- சீனியவரை
- கொத்தவரை
- குத்தவரை
- சுடலையவரை அல்லது பேயவரை
- பட்டவரை
- வாளவரை
- தம்பட்டவரை
- சாட்டவரை
வெளி இணைப்புகள்
[தொகு]- Dolichos bean, Lablab purpureus (L.) Sweet பரணிடப்பட்டது 2013-02-04 at the வந்தவழி இயந்திரம் by the University of Agricultural Sciences, Bangalore, India
- Avadhani, Ramesh (Spring 2006). "The Bangalore Beans". Mood Indico.
- Lablab purpureus. JSTOR Global Plants.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lablab purpureus at Multilingual taxonomic information from the மெல்பேர்ண் பல்கலைக்கழகம்
- ↑ Lablab purpureus. Tropical Forages.
- ↑ Lablab purpureus L. (Sweet). பரணிடப்பட்டது 2013-02-04 at the வந்தவழி இயந்திரம் University of Agricultural Sciences, Bangalore, India.
- ↑ Lablab purpureus, general information. பரணிடப்பட்டது 2020-07-15 at the வந்தவழி இயந்திரம் University of Agricultural Sciences, Bangalore, India.
மேற்சான்று
[தொகு]தமிழ் வளம்-நூல் பக்கம் 35, ஆசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்மண் பதிப்பகம்,சென்னை.