கொத்தவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொத்தவரை
Cyamopsis tetragonoloba
கொத்தவரை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
Angiosperms
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Fabales
குடும்பம்: Fabaceae
பேரினம்: Cyamopsis
இனம்: C. tetragonoloba
இருசொற் பெயரீடு
Cyamopsis tetragonoloba
(L.) Taub.
வேறு பெயர்கள்

Cyamopsis psoralioides L.

கொத்தவரை அல்லது சீனி அவரை (தாவர வகைப்பாடு : Cyamopsis tetragonoloba ; ஆங்கிலம்:Guar / cluster bean) என்பது உணவாகப் பயன்படும் காய்களைக் கொண்ட தாவரம் ஆகும்.

உயிரியல்[தொகு]

கொத்தவரை செடி வகையைச் சேர்ந்தது. 3 முதல் 4 அடி உயரம் வளரக்கூடியது. கொத்தவரை மண்ணில் நைட்ரசன் சத்தை அதிகரிக்க செய்து மண்ணின் வளத்தை பெருக்குகிறது.

பயிரிடுதல்[தொகு]

தேவையான காலநிலை[தொகு]

மிதமான சூரிய ஒளியும், அதே நேரத்தில் மண்ணில் ஈரப்பதமான காலநிலையும் தேவை.[1]

தேவையான மண்வளம்[தொகு]

கொத்தவரை பல்வேறு வகையான மண் வகைகளில் வளரும் தன்மையுடையது.

அதிகமாகப் பயிரிடப்படும் இடங்கள்[தொகு]

இது வடமேற்கு இந்தியாவிலும் பாக்கித்தானிலும் கூடுதலாகப் பயிரிடப்படுகிறது.

பயன்கள்[தொகு]

இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

  1. கொத்தவரங்காயில் புரதம் நிறைந்துள்ளது.
  2. நீரில் கரையும், சீரணத்திற்கு உதவும் நார்ச்சத்தும், உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு உதவும் நீரில் கரையாத நார்ச்சத்தும் இதில் உள்ளது.
  3. கொத்தவரங்காயில் போலிக் அமிலம் உள்ளதால் இதை கர்ப்பிணிப் பெண்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
  4. இதிலிருக்கும் கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
  5. இரும்புச் சத்து ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது.
  6. கொத்தவரங்காய் விதை மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது.இதை பொடி செய்து உட்கொண்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
  7. உடல் எடையையும் உடல் கொழுப்பையும் குறைக்கும்.
  8. மலச்சிக்கலையும் போக்கும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. Whistler R.L. and Hymowitz T. 1979. Guar: agronomy, production, industrial use and nutrition. Purdue University Press, West Lafayette
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தவரை&oldid=2560641" இருந்து மீள்விக்கப்பட்டது