இருபுற வெடிக்கனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பல்வேறு லெகூம்கள்

இருபுற வெடிக்கனி அல்லது லெகூம் (legume), பெபேசி (லேகூமினேசி) குடும்ப வகையைச்சார்ந்த தாவரங்களாகும். கனியின் அல்லது விதையின் வெளிபுறத்தோலானது இருபுறமும் சமமாக பிளவுறும் தன்மையுடையகனி "இருபுற வெடிகனி" என்கிறோம். இவை சூல்வித்திலையின் இருந்து உருவாகி இரண்டு பக்கங்களிலும் ஒரு மடிப்பு சேர்ந்து திறக்கும். வேர் முண்டுகளில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் தாவரங்கள் இவ்வகயைச்சார்ந்தவை. அல்ஃப்அல்ஃபா, தீவனப்புல், பட்டாணி, பீன்ஸ், கீரை, லூப்பின், சோயாபீன்ஸ், வேர்கடலை, புளி, முதலிய தாவரங்கள் இவ்வகையில் அடங்கும்.

நைட்ரசனை நிலைப்படுத்தும் தன்மை[தொகு]

இருபுற வெடிகனிகளான (அல்ஃப்அல்ஃபா, தீவனப்புல், பட்டாணி , அவரைகள், பருப்புகள், சோயா, வேர்க்கடலை, முதலியவற்றின் வேர்பகுதிகளில் முடிச்சு போன்ற அமைப்புகள் காணப்பெறும். இம்முண்டுகளில் நன்மை செய்யும் பாக்ட்ரியாக்கள் கூட்டுயிரிகளாக வாழுகின்றன. இவற்றுக்கு ரைசொபியா அல்லது நைட்ரசனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் (எ.கா:ரைசோபியம் லெகுமினோசாரம் (Rhizobium leguminosarum)) என்று பெயர். ரைசொபியங்கள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரசனை (N2) நிலைப்படுத்தி நைட்ரசன் ஊட்டச்சத்து (அம்மோனியா(NH3)க்களைக் கிடைக்கச் செய்கின்றன.

வேதிவினை பின்வருமாறு:

N_2 + 8H^+ + 8e^- \to 2NH_3 + H_2

தாவரம் பயன்படுத்துதற்கு ஏதுவாக அம்மோனியா பிறகு அம்மோனியமாக (NH4+)மாற்றப்பட்டு வேர்முண்டுகளில், நிலைப்படுத்தப்படுகிறது.

NH_3 + H^+ \to NH_4^+

இதன் மூலம் நைட்ரசன், இருபுற வெடிகனிகளின் வேர் முண்டுகளில் தாவரபுரதத்தின் உற்பத்தி மூலமான அமினோஅமிலங்களை நிலைப்படுத்துவதை அறியலாம். இதன் காரணமாகவெ இருபுற வெடிகனிகள் ஏனய தாவரங்களை விடவும் புரதச்சத்து மிகுந்தவையாக உள்ளன.

இருபுற வெடிகனி தாவரங்களின் இறந்த உடலங்கள் நைட்ரசன் மிகுந்த உரமாகப் பயன்படுகின்றன. சான்றாக, அறுவடையின் பிறகு எஞ்சியுள்ள தாவரக் கழிவுகளில் அமினோ அமிலங்கள் உள்ளன. இவை நைட்ரேட்டுகளாக(NO3-) மாற்றப்பட்டு, தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்தப்படுகின்றன.

பல மரபு மற்றும் இயற்கை வேளாண்மை முறைகளில் லெகூம் பயிர்சுழற்சி முறை வழக்கமான ஒன்றாகும். இரு வரிசைகளில் லெகூம் தாவரங்களும், மாற்று வரிசைகளில் லெகூம் அல்லாத தாவரங்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இதன் மூலம் நைட்ரசன் சத்துக்கள் லெகூம் அல்லாத தாவரங்களும் பெற்று பயன்பெறும். எனவே இத்தாவரங்கள் "பசுந்தாள் உரங்கள்" என போற்றப்படுகின்றன.

தீவனப்புல்
காராமணியின் வேர் முண்டுகளில் ரைசோபியா

வேர்க்கடலை இருபுற வெடிகனியின் உற்பத்தி[தொகு]

கருவுறுதல் நிகழ்ச்சிக்குப் பிறகு. அராக்கிசு ஃகைபோசியா (Arachis hypogaea) தாவரமலரின் சூற்பைக் காம்பு, ஆக்கத்திசுவாக மாறி, வளர்ச்சி அடைந்து, கருவுற்ற சூற்பையை மண்ணிற்குள் செலுத்துகிறது. எனவே, வேர்க்கடலை மண்ணிற்கு அடியில் உற்பத்தியாகிறது.

நிலத்திலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட வேர்க்கடலை

பொருளாதாரப் பயன்கள்[தொகு]

கீழ்க்கண்ட இருபுற வெடிக்கனியின் சிற்றினங்களால், நமது அன்றாட வாழ்வின் புரதச்சத்து தேவை பூர்த்தியாகி, வாழ்க்கையும் சீராக்குகிறது.

 1. பருப்பு வகைகள்
  கஜானஸ் கஜான் (துவரை). விக்னா முங்கோ (உளுந்து). விக்னா ரேடியேட்டா (பச்சைப்பயறு). விக்னா உங்கிகுளேட்டா (கொள்ளு), சைசெர் ஆரிடினம் (மூக்கடலை) முதலியன புரதச்சத்து மிகுந்த பருப்பு வகைகள்.
 2. காய்கறி வகைகள்
  முதிர்ச்சியடையாத லாப்லாப் பர்பூரீயஸ் (அவரை) தாவரக் கனியும், செஸ்பேனியா கிராண்டிஃபுளோரா (அகத்தி) தாவர இலைகளும் சமையலுக்கும் பயன்படுகின்றன.
 3. எண்ணெய்த் தாவரங்கள்
  அராக்கிஸ் ஹைபோஜியா (வேர்கடலை) தாவர விதைகளிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு பயன்படுகிறது. மேலும், அவ்விதைகள் உண்ணக்கூடியவை.
  பொங்கேமியா பின்னேட்டா (புங்கம்) தாவர விதைகளிருந்து பிரித்தெடுக்கப்படும் புங்க எண்ணெய் மருத்துவ குணமுடையது. மேலும், இது சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது,

இருபுற வெடிக்கனிகளின் சமையல் வகைப்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபுற_வெடிக்கனி&oldid=1974124" இருந்து மீள்விக்கப்பட்டது