தொப்பூர்
தொப்பூர் (Thoppur) என்பது இந்தியாவில் உள்ள, தமிழ்நாடு மாநிலத்தின், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை சிற்றூர் ஆகும். இது தர்மபுரி மாவட்டத்திற்கும், சேலம் மாவட்டத்திற்கும் இணைப்புப் பாலமாக, தேசிய நெடுஞ்சாலை 44இல், மேட்டூர் அணை சாலை (மா. நெ 20) சந்திப்பில் உள்ளது. இது சேலம் மாநகருக்கு வடக்கே 35 கிலோமீட்டர் (22 மைல்) மற்றும் தர்மபுரி நகருக்கு தெற்கே 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவிலும் உள்ளது.
தொப்பூரானது தொப்பையாறு அணை, முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில், பெருமாள் கோவில் (வனகுண்ட மலை) ஆகியவற்றுக்காக பெயர் பெற்றது. மேலும் தொப்பூரானது முசுலீம்களின் புனிதத் தலமான ஹஸ்ரத் சையத் ஷா வலி உல்லா (தொப்பூர் தர்கா) அமைந்துள்ள இடமாகும்.
போக்குவரத்து
[தொகு]தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை 44 இல் உள்ளது, இது இந்தியாவின் முக்கிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையாகும். [1] இது மேட்டூர் நகரத்தையும் ஈரோடு நகரத்தையும் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 20 இன் இணைப்புப் புள்ளியாகும். [2] மா. தெ-44, தமிழ்நாட்டில் தருமபுரி மற்றும் தொப்பூர் இடையே உள்ள கணவாய் சாலையானது, மலைப்பாங்கான சரிவுகள் கொண்ட மோசமான சாலையாகும் இதன் வடிவமைப்பு காரணமாக அபாயகரமான விபத்துகளுக்கு மிகவும் வாய்ப்புள்ளது.[சான்று தேவை]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
மக்கள் தொகை
[தொகு]இவ்வூரில் சுமார் 2300 குடும்பங்கள் வசிக்கின்றன. 4883 ஆண்கள் , 4468 பெண்கள் , 1041 குழந்தைகள் உட்பட மொத்தம் 10392 மக்கள்தொகை கொண்டுள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ "Official apathy turns Thoppur Ghat a killer stretch". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 December 2011 இம் மூலத்தில் இருந்து 8 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111208124434/http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Official-apathy-turns-Thoppur-Ghat-a-killer-stretch/articleshow/11032110.cms.
- ↑ "Tamil Nadu Road Sector Project". Highways and Minor Ports Department. Archived from the original on 14 December 2012.