மாரண்டஅள்ளி
மாரண்டஹள்ளி | |
அமைவிடம் | 12°24′N 78°00′E / 12.4°N 78.0°Eஆள்கூறுகள்: 12°24′N 78°00′E / 12.4°N 78.0°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
வட்டம் | பாலக்கோடு |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
12,451 (2011[update]) • 7,782/km2 (20,155/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 1.6 சதுர கிலோமீட்டர்கள் (0.62 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/marandahalli |
மாரண்டஹள்ளி (ஆங்கிலம்:Marandahalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்[தொகு]
இப்பேரூராட்சிக்கு தெற்கில் தருமபுரி 45 கிமீ; வடக்கில் ஒசூர்]] 65 கிமீ; கிழக்கில் கிருஷ்ணகிரி 45 கிமீ; மேற்கில் பெங்களூர் 90 தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
1.60 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,179 வீடுகளும், 12,451 மக்கள்தொகையும் கொண்டது.[4]
போக்குவரத்து வசதிகள்[தொகு]
பேருந்து வசதிகள்[தொகு]
இந்த நகரத்தின் பிரதான சாலை வழியாக இணைக்கும் ஊர்கள் 1,கிழக்கே கிருஷ்ணகிரி (வழி:வெள்ளிசந்தை, காவேரிப்பட்டிணம்) 2,மேற்கே தேன்கனிக்கோட்டை (வழி:பஞ்சபள்ளி டேம், ரத்னகிரி) 3,வடக்கே ஒசூர் (வழி: காடுசெட்டிப்பட்டி, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி,ஆளேசீபம்) 4,தெற்கே சேலம் (வழி: அ.மல்லாபுரம், பாலக்கோடு, தர்மபுரி, தொப்புர்,ஓமலூர்)
தொடருந்து வசதிகள்[தொகு]
இந்த நகரத்தின் தொடர்வண்டி நிலையம் மாரண்டஹள்ளி ஆகும். இந்த தொடர்வண்டி நிலையத்தில் இருந்து பெங்களூரு மற்றும் காரைக்கால் வரை செல்லலாம்.
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 12°24′N 78°00′E / 12.4°N 78.0°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 581 மீட்டர் (1906 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ மாரண்டஹள்ளி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Marandahalli Population Census 2011
- ↑ "Marandahalli". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.