அய்யனார் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐயனார்கோட்டை
கிராமம்
ஐயனார்கோட்டை is located in தமிழ் நாடு
ஐயனார்கோட்டை
ஐயனார்கோட்டை
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°20′33.9″N 77°57′06.9″E / 12.342750°N 77.951917°E / 12.342750; 77.951917
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
வட்டம்பாலக்கோடு
அருகாமை நகரம்மாரண்டஹள்ளி
அரசு
 • ஆளுநர்ஆர். என். ரவி
 • முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்
 • மாவட்ட ஆட்சியர்கி. சாந்தி, இ.ஆ.ப.
ஏற்றம்(700) m (2,300 ft)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 806
தொலைபேசி குறியீடு04348
வாகனப் பதிவுTN 29

ஐயனார் கோட்டை[1], (ஆங்கிலத்தில்:Iyyanar kottai) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம்[2], பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி[3] அருகே உள்ள கெண்டேனஅள்ளி ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

கோவில்கள்[தொகு]

  1. அய்யனார் கோட்டை அருகே உள்ள எல்லைக்கட்டு மாரியம்மன் கோவில் உள்ளது இது பழமையான கோவிலாக திகழ்கிறது.
  2. அய்யனார் கொட்டாயில் உள்ள சிவன் கோவில் இப்பகுதிகளில் பிரபலமான கோவிலாக திகழ்கிறது.
  3. இப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு பெற்றதாகும்.

அமைவிடம்[தொகு]

அய்யனார் கோட்டை தருமபுரியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், மாரண்டஅள்ளியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும், கிருஷ்ணகிரியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும், ஒசூரில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அய்யனார் கோட்டை மூன்று புறமும் உயர்ந்த மலைகளைக் கொண்ட ஒரு பகுதியாகும். மேலும் இம்மலைகள் காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் அருகில் அழகாக அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

அய்யனார் கோட்டைக்கு[4] பிரதான சாலையாக மாரண்டஅள்ளியில் இருந்து சாஸ்திரமுட்லு வழியாக அய்யனார் கோட்டையை அடையலாம். மேலும் தேன்கனிக்கோட்டையில் இருந்து இருதுகோட்டை, அய்யூர், பெட்டமுகலாளம், தோழன்கிணறு, அண்ணாநகர்,சாஸ்திரமுட்லு வழியாக அய்யனார் கோட்டையை அடையலாம். இராயக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி சாஸ்திரமுட்லு வழியாக அய்யனார்கொட்டாயை அடைலாம். மாவட்ட தலைநகரான தருமபுரியில் இருந்து 46 கி.மீ. தூரத்தில் உள்ளது. மாநில தலைநகர் சென்னையில் இருந்து 303 கி.மீ. தூரத்தில் உள்ளது.

காலநிலை[தொகு]

அய்யனார் கோட்டை சராசரி வெப்பநிலை 25.8 டிகிரி செல்சியஸ் மற்றும் சராசரி மழையளவு 874 மி.மீ ஆகும்.[5]

தொழில்கள்[தொகு]

அய்யனார் கோட்டைப் பகுதி வறட்சியான பகுதியாகும். இங்கு மேட்டு நிலங்களே அதிகம். இங்கு மானாவரி பயிர்கள் என்று அழைக்கப்படக்கூடிய சாமை, கொள்ளு, அவரை, போன்ற மேட்டு நில தானியங்கள் விளைவிக்கப்படுகின்றது. இப்பகுதியில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கல்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சென்னை, தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Asset Register". mnregaweb2.nic.in. Archived from the original on 2022-11-16. பார்க்கப்பட்ட நாள் 2022-11-16.
  2. "தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | Land of Adhiyaman Fort | India". பார்க்கப்பட்ட நாள் 2022-11-16.
  3. "Marandahalli Town Panchayat". www.townpanchayat.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-16.
  4. "Palacode climate: Average Temperature, weather by month, Palacode weather averages - Climate-Data.org". en.climate-data.org. https://en.climate-data.org/asia/india/tamil-nadu/palacode-171871/. 
  5. "Palacode climate: Average Temperature, weather by month, Palacode weather averages - Climate-Data.org". en.climate-data.org. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யனார்_கோட்டை&oldid=3692117" இலிருந்து மீள்விக்கப்பட்டது