உள்ளடக்கத்துக்குச் செல்

திரிசூலம் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°58′23″N 80°10′12″E / 12.97306°N 80.17000°E / 12.97306; 80.17000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிசூலம்
சென்னை புறநகர் தொடருந்து நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தேசிய நெடுஞ்சாலை 32, திரிசூலம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்12°58′23″N 80°10′12″E / 12.97306°N 80.17000°E / 12.97306; 80.17000
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்தெற்கு மற்றும் தென் மேற்கு புறநகர் வழித்தடங்கள்
நடைமேடை4 (280 m (920 அடி))
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுTLM
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
முந்தைய பெயர்கள்தென்னிந்திய இரயில்வே
அமைவிடம்
திரிசூலம் is located in சென்னை
திரிசூலம்
திரிசூலம்
சென்னை வரைபடத்தில் உள்ள இடம்
திரிசூலம் is located in தமிழ் நாடு
திரிசூலம்
திரிசூலம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
திரிசூலம் is located in இந்தியா
திரிசூலம்
திரிசூலம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

திரிசூலம் தொடருந்து நிலையம் (Tirusulam railway station, நிலையக் குறியீடு:TLM) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.

இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில், தேசிய நெடுஞ்சாலை 32 இல் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் எதிர் திசையிலேயே சென்னை வானூர்தி நிலையம் உள்ளதால் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 20மீ உயரத்தில் உள்ளது.

வரலாறு

[தொகு]

இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் தொடருந்து சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]

வளர்ச்சி

[தொகு]

இந்த நிலையம் சுரங்கப்பாதை மூலம் சென்னை விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2] இந்த நிலையம் விமான நிலையத்தின் நுழைவாயிலில் அமைந்திருந்தாலும், சரியான அணுகுமுறையும், மேற்கூரையும் மற்றும் பிற வசதிகள் இல்லாததால் இந்த நிலையம் விமான பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை.[3] 2012 இல் சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கியதன் மூலம், நிலையத்தில் பல சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.[4] விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ இரயில் நிலையத்துடன், இந்நிலையத்தை இணைக்கும் திட்டங்களும் உள்ளன.[5]

படங்கள்

[தொகு]

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electric Traction - I". IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. Sekar, Sunitha (30 November 2012). "Safety trumps use of Tirusulam subway". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/safety-trumps-use-of-tirusulam-subway/article4147718.ece. பார்த்த நாள்: 15 Dec 2012. 
  3. Sreevatsan, Ajai (23 April 2011). "Airport-railway station link planned". The Hindu (Chennai: The Hindu) இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110426115013/http://www.hindu.com/2011/04/23/stories/2011042364760300.htm. பார்த்த நாள்: 15 Dec 2012. 
  4. "Lack of coordination mars attempts to revamp Tirusulam station". The Hindu (Chennai: The Hindu). 7 August 2012. http://www.thehindu.com/news/cities/chennai/article3735396.ece. பார்த்த நாள்: 15 Dec 2012. 
  5. Janardhanan, Arun (23 September 2011). "Corridor to connect airport with stations". The Times of India (Chennai: The Times Group) இம் மூலத்தில் இருந்து 16 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130516055535/http://articles.timesofindia.indiatimes.com/2011-09-23/chennai/30193229_1_metro-rail-airport-metro-cmrl. பார்த்த நாள்: 15 Dec 2012. 

வெளி இணைப்புகள்

[தொகு]