பேருந்து நிலையம்
பேருந்து நிலையம் (Bus station) என்பது நகரம் அல்லது உள்நகர மற்றும் சிற்றூர்களுக்கு பேருந்துகள் பயணிகளை ஏற்றிச்செல்லவும் இறக்கி விடவும் அமைந்துள்ள இடமாகும். மேலும், பேருந்து நிலையம் என்பது பேருந்து நிறுத்தத்தைவிட பெரியதாகும். ஒரு பேருந்து நிறுத்தம் என்பது சாலையோரத்தில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக அமைந்துள்ள குறிப்பிட்ட இடங்களாகும். ஒவ்வொரு பேருந்தும் ஒரு குறிப்பிட்ட பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்லும். பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு பேருந்து தொடா்ந்து சென்று கொண்டே இருக்கும். பேருந்து நிலையங்களில் குறியீடுகள், பலகைகளில் விவரங்கள் பாா்த்து பயணிகள் தங்களுக்குத் தேவையான செய்திகளை அறிந்து கொள்வா்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "New hightech bus station in Amstelveen opened". Vialis. 2009-10-13. 2012-09-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-02-07 அன்று பார்க்கப்பட்டது.