பட்டுக்கோட்டை தொடருந்து நிலையம்
Appearance
பட்டுக்கோட்டை | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இரயில்வே நிலையம் சாலை அல்லது அதிராம்பட்டினம் சாலை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°25′00″N 79°19′08″E / 10.4168°N 79.3190°E | ||||
ஏற்றம் | 23 மீட்டர்கள் (75 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர் - இராமேசுவரம் வழித்தடம் | ||||
நடைமேடை | 3 + 1 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகையுந்து நிறுத்தம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | PKT | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
பட்டுக்கோட்டை தொடருந்து நிலையம் (Pattukkottai railway station, நிலையக் குறியீடு:PKT) என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த தொடருந்து நிலையம், அதிராம்பட்டினம் சாலையில் உள்ளது. இது பேருந்து நிலையத்திற்கு அரை கி.மீ அருகில் உள்ளது. பட்டுக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து, திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமானது 96 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த நிலையம் சென்னை எழும்பூர் - இராமேசுவரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. திருவாரூர், காரைக்குடிக்கு இரயில்கள் சில ஆண்டுகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 2018-க்கு பிறகு இப்பாதை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பட்டுக்கோட்டை- மன்னை ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது: திருச்சி கோட்ட மேலாளர் தகவல்". Archived from the original on 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் 2020-05-08. தினகரன் (28 மார்ச், 2019)
வெளி இணைப்புகள்
[தொகு]- "Departures from PKT/Pattukottai". India Rail Info.