பண்ருட்டி தொடருந்து நிலையம்
பண்ருட்டி | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை 45C, தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை, பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°46′24″N 79°33′17″E / 11.7733°N 79.5546°E | ||||
ஏற்றம் | 26 மீட்டர் | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 3 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | PRT[1] | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
பண்ருட்டி தொடருந்து நிலையம் (Panruti railway station, நிலையக் குறியீடு:PRT) ஆனது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி நகரத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
இந்த தொடருந்து நிலையம், தென்னக இரயில்வே மண்டலத்தின், திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கிறது.
இடம் மற்றும் அமைப்பு
[தொகு]தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் (NH 45C) பண்ருட்டி தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகிலேயே பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. இந்நிலையத்திற்கு அருகே உள்ள விமான நிலையம் 165 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம் ஆகும்.
இரயில் தடங்கள்
[தொகு]இந்த இரயில் நிலையம் தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்குடி, திருவாரூர், இராமேஸ்வரம் போன்ற முக்கிய தொடருந்து நிலையங்களை சென்னையுடன் இணைக்கும் ஒரு மைய புள்ளியாக அமைந்துள்ளது.
- அகல இரயில்பாதை (BG) சென்னை எழும்பூருக்கு, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் வழியாக ஒற்றை வழித்தடம் .
- அகல இரயில்பாதை (BG) திருச்சிராப்பள்ளி சந்திப்புக்கு, கடலூர் சந்திப்பு , மயிலாடுதுறை சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு வழியாக ஒற்றை வழித்தடம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mustseeindia". Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 13 July 2013.