அரவங்காடு தொடருந்து நிலையம்
தோற்றம்
அரவங்காடு | |||||
|---|---|---|---|---|---|
| தொடருந்து நிலையம் | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 11°13′N 76°28′E / 11.21°N 76.46°E | ||||
| ஏற்றம் | 1,887 மீட்டர்கள் (6,191 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
| தடங்கள் | நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து | ||||
| நடைமேடை | 1 | ||||
| இணைப்புக்கள் | பேருந்து | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
| தரிப்பிடம் | உண்டு | ||||
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலையக் குறியீடு | AVK | ||||
| பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
| வரலாறு | |||||
| திறக்கப்பட்டது | 1908 | ||||
| |||||
அரவங்காடு தொடருந்து நிலையம் (Aravankadu railway station, நிலையக் குறியீடு:AVK) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் அரவங்காடு நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் குன்னூர் மற்றும் உதகமண்டலம் இடையே அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க நீலகிரி மலை தொடருந்து பாதையில் உள்ள நிலையங்களில் ஒன்றாகும். இது தற்போது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2] இந்த நிலையம் தென்னக இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படுகிறது மற்றும் சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது.
தொடருந்துகள்
[தொகு]| எண். | தொடருந்து எண்: | புறப்படும் இடம் | சேரும் இடம் | தொடருந்து பெயர் |
|---|---|---|---|---|
| 1. | 56136/56137 | மேட்டுப்பாளையம் | உதகமண்டலம் | பயணிகள் தொடருந்து |
| 2. | 56140/56141 | உதகமண்டலம் | குன்னூர் | பயணிகள் தொடருந்து |
| 3. | 56142/56143 | உதகமண்டலம் | குன்னூர் | பயணிகள் தொடருந்து |
| 4. | 56138/56139 | குன்னூர் | உதகமண்டலம் | பயணிகள் தொடருந்து |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஊட்டி மலை ரயில் சேவையின் கட்டணம் உயர்வு - மார்ச் 1 முதல் உயர்ந்தது".பிபிசி தமிழ்
- ↑ "'கூகுள் மேப்'பில் மலை ரயில் பதிவு". தினமலர் (மார் 29, 2018)
வெளி இணைப்புகள்
[தொகு]- அரவங்காடு தொடருந்து நிலையம் Indiarailinfo.