லவ்டேல் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லவ்டேல்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இந்தியா
ஆள்கூறுகள்11°22′58″N 76°42′17″E / 11.3829°N 76.7047°E / 11.3829; 76.7047
ஏற்றம்2,211 மீட்டர்கள் (7,254 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து
நடைமேடை1
இணைப்புக்கள்பேருந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுLOV
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1908; 116 ஆண்டுகளுக்கு முன்னர் (1908)
அமைவிடம்
லவ்டேல் is located in தமிழ் நாடு
லவ்டேல்
லவ்டேல்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
லவ்டேல் is located in இந்தியா
லவ்டேல்
லவ்டேல்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

லவ்டேல் தொடருந்து நிலையம் (Lovedale railway station,நிலையக் குறியீடு:LOV) இந்தியாவின், தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள லவ்டேல் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். உதகமண்டலம் நகரத்திற்கு தெற்கே உள்ள லவ்டேல் என்ற பகுதியில் இந்த தொடருந்து நிலையம் இயங்குகிறது. 1908 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீலகிரி மலை இரயில் பாதையில் இடம்பெற்றுள்ள தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாகவும் லவ்டேல் தொடருந்து நிலையப் பகுதி கருதப்படுகிறது. இந்த தொடருந்து நிலையம் ஒரு உலக பாரம்பரியக் களமாகும். ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் விரும்பி பயணித்து வந்து தங்குமிடமாகவும் இத்தளம் கருதப்படுகிறது. இது தென்னக இரயில்வேக்கு உட்பட்ட சேலம் கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1]

தொடருந்துகள்[தொகு]

எண்: தொடருந்து எண்: புறப்படும் இடம் சேரும் இடம் தொடருந்து பெயர்
1. 56136/56137 மேட்டுப்பாளையம் உதகமண்டலம் பயணிகள் இரயில்
2. 56140/56141 உதகமண்டலம் குன்னூர் பயணிகள் இரயில்
3. 56142/56143 உதகமண்டலம் குன்னூர் பயணிகள் இரயில்
4. 56138/56139 குன்னூர் உதகமண்டலம் பயணிகள் இரயில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "உதகை கோடை சீசன்: இன்று முதல் தினசரி ரயிலாக மாறும் சிறப்பு மலை ரயில்". தினமணி (29 ஏப்ரல், 2019)

வெளி இணைப்புகள்[தொகு]