வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம்
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
தொடருந்து நிலையத்தின் பெயர் பலகை | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | ஒட்டந்தம்-மணியாச்சி சாலை, மணியாச்சி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 8°52′52″N 77°53′29″E / 8.8811°N 77.8913°E | ||||
ஏற்றம் | 70 மீட்டர்கள் (230 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
நடைமேடை | 4 | ||||
இருப்புப் பாதைகள் | 6 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | MEJ | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | மதுரை | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் (Vanchi Maniyachchi Junction railway station, நிலையக் குறியீடு:MEJ) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, தூத்துக்குடி மாவட்டத்தில், மணியாச்சி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தெற்கிலுள்ள திருநெல்வேலியையும், கிழக்கு உள்ள தூத்துக்குடியையும் இணைக்கிறது.
வரலாறு
[தொகு]விடுதலைப் போராட்ட வீரரான வாஞ்சிநாதனை நினைவூட்டும் வகையில் இப்பெயரை, இத்தொடருந்து நிலையத்திற்கு வைத்துள்ளனர். இந்த இடத்தில் தான், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை ( Robert William Escourt Ashe) வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1] இந்தியாவின் 7 இரயில்வே மண்டலங்களுள் ஒன்றான, தென்மண்டல இரயில்வேயில் இது அடங்குகிறது. இத்தென்மண்டல இரயில்வேயிலுள்ள கோட்டங்களில், இது மதுரை இரயில்வே கோட்டத்தின் கீழ் அமைந்து, முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.
அமைவிடம்
[தொகு]இது தூத்துக்குடியில் இருந்து 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவில், ஒட்டந்தம்-மணியாச்சி சாலையில் அமைந்துள்ளது.
வழித்தடம்
[தொகு]இந்த நிலையத்திலிருந்து மூன்று தடங்கள் கிளையாக பிரிகின்றது.
- விருதுநகர் சந்திப்பு வழியாக வடக்கு நோக்கி ஒற்றை அகலப்பாதை.
- திருநெல்வேலி சந்திப்பு வழியாக தெற்கு நோக்கி ஒற்றை அகலப்பாதை.
- தூத்துக்குடி சந்திப்பு வரை கிழக்கு நோக்கி ஒற்றை அகலப்பாதை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Centenary of a historical assassination today". பார்க்கப்பட்ட நாள் 14 July 2013.