ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஈரோடு சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஈரோடு சந்திப்பு
தொடருந்து நிலையம்
Erode-Junction-Railway-Station-ED.JPG
ஈரோடு சந்திப்பின் முகப்பு வாயில்
இடம்ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
அமைவு11°21′00″N 77°44′00″E / 11.35000°N 77.73333°E / 11.35000; 77.73333
உயரம்183 மீட்டர்கள் (600 ft)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்ஜோலார்பேட்டை - ஷொறணூர் வழித்தடம்
ஈரோடு - திருச்சிராப்பள்ளி வழித்தடம்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்12
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுED
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1862; 160 ஆண்டுகளுக்கு முன்னர் (1862)
மின்சாரமயம்ஆம், 1990
போக்குவரத்து
பயணிகள் 50000
அமைவிடம்
ஈரோடு சந்திப்பு is located in தமிழ் நாடு
ஈரோடு சந்திப்பு
ஈரோடு சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
ஈரோடு சந்திப்பு is located in இந்தியா
ஈரோடு சந்திப்பு
ஈரோடு சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம் (Erode Junction railway station, நிலையக் குறியீடு:ED), இந்தியாவின், தமிழ்நாட்டின் முக்கிய நகரான ஈரோடு நகரில் உள்ள தொடருந்து நிலையமாகும். தமிழகத்தின் முக்கிய தொடருந்து நிலையங்களுள் ஒன்றான இந்த நிலையம், தென்னக இரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும், சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் (ISO) அங்கீகாரம் பெற்ற டீசல் எந்திர தளமும், மின்மய எந்திர தளமும் ஒருங்கே பெற்றுள்ளது. இந்தியாவின் திருநாட்டின் மூன்றாவது தூய்மையான தொடர்வண்டி சந்திப்பு என பெயர்பெற்றது.[சான்று தேவை]

ஈரோட்டிலிருந்து செல்லும் பாதைகள்[தொகு]

எண். சேருமிடம் மார்க்கம் இருப்புப் பாதையின் வகை மின்மயம் ஒருவழி/ இருவழி
1 கோயம்புத்தூர் திருப்பூர் அகலப்பாதை ஆம் இருவழிப் பாதை
2 சேலம் சங்ககிரி அகலப்பாதை ஆம் இருவழிப் பாதை
3 கரூர் கொடுமுடி அகலப்பாதை ஆம் ஒருவழிப் பாதை

வரலாறு[தொகு]

இந்நிலையமானது 1947ம் ஆண்டு சென்னை சென்ட்ரலில் இருந்து மின்மயம் மற்றும் அகலப்பாதையுடன் இணைவு பெற்றது. தமிழகத்தின் முக்கிய தொடர்வண்டி நிலையங்களுள் ஒன்றான இந்த நிலையம், முக்கிய மாநகரங்களான சென்னை, மதுரை, கோவை ஆகிய முக்கிய மாநகரங்களுடன் இணைந்துள்ளது.

வசதிகள்[தொகு]

WAP-4 வகை மின்மய தொடர்வண்டி, ஈரோடு

இந்நிலையத்தில், பயணியர்களுக்காக 4 நடைமேடை உள்ளது. நெடுந்தூர தொடர்வண்டிகளுக்காக தண்ணீர் நிரப்பவும், உணவு பரிமாறவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும் இங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையம், புத்தகக் கடைகள், உணவகங்கள், உறைவிடங்கள், ஏடிஎம், போதுமான கழிவறைகள் மற்றும் குட் தண்ணீர் வசதிகளும் உள்ளன. தொடுதிரை தகவல் சேகரிப்பு மையம், தொடர்வண்டி கால அட்டவணை, நிலையத்தை கடந்து செல்லும் தொடர்வண்டிகளின் விபரம் தாங்கிய மின்னணு பலகைகளும் உள்ளது. பயணிகளின் வசதிக்காக ஒரு முன்பதிவு மையமும் செயல்பட்டு வருகின்றது.

உந்துப்பொறிகளின் உறைவிடம்[தொகு]

இந்தியாவில், டீசல் மற்றும் மின்மய உந்துப்பொறிகளின் உறைவிடங்கள் மிகச் சிலவே. அவைகளுள் ஈரோடு சந்திப்பும் ஒன்றாகும். இங்கு மொத்தம், 338 மின்மய மற்றும் டீசல் உந்துப்பொறிகள் உள்ளன.[1] இதுவே இந்திய இரயில்வே துறையின் மிகப்பெரிய உந்துப்பொறிகளின் உறைவிடமாகும். ISO தரச்சான்றிதழ் பெற்ற இங்கு 108 WAP-4 வகை உந்துகளும், மின்மய தொடருந்தின் புது வகையான WAG-7ம் உள்ளது. 1962 முதல், WDM-2 WDM-3A வகை டீசல் தொடருந்துகளும் கையாளப்படுகின்றது. மேலும், இந்நிலையத்தை கடந்து செல்லும் நெடுந்தொலைவு தொடருந்துகளுக்கும் இங்கு பராமரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

ஈரோட்டிலிருந்து புறப்படும் தொடர் வண்டிகள்[2][தொகு]

வண்டி எண். பெயர் வகை நாட்கள் சேருமிடம் மார்க்கம்
16669/70 ஏற்காடு அதிவிரைவு அதிவிரைவு தினமும் சென்னை சென்ட்ரல் சேலம் சந்திப்பு
56100 மேட்டூர் அணை பயணிகள் இரயில் பயணிகள் இரயில் தினமும் மேட்டூர் அணை சேலம் சந்திப்பு
56843 திருச்சிராப்பள்ளி பயணிகள் இரயில் பயணிகள் இரயில் தினமும் திருச்சிராப்பள்ளி சந்திப்பு கரூர்
56844 திருச்சிராப்பள்ளி பயணிகள் இரயில் பயணிகள் இரயில் தினமும் திருச்சிராப்பள்ளி சந்திப்பு கரூர்
56840 ஜோலார்பேட்டை பயணிகள் இரயில் பயணிகள் இரயில் தினமும் ஜோலார்பேட்டை சேலம் சந்திப்பு
56846 ஜோலார்பேட்டை பயணிகள் இரயில் பயணிகள் இரயில் தினமும் ஜோலார்பேட்டை சேலம் சந்திப்பு
56825 திருநெல்வேலி பயணிகள் இரயில் பயணிகள் இரயில் தினமும் திருநெல்வேலி சந்தப்பு மதுரை சந்தப்பு

ஈரோட்டை கடந்து செல்லும் தொடர் வண்டிகள்[தொகு]

தினமும் நூற்றுக்கணக்கான தொடர் வண்டிகள் ஈரோட்டை கடந்து செல்கின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-02-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-08-19 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://indiarailinfo.com/departures/39/0?t=11&s=0&kkk=1362077073765
  3. http://erail.in?AD=ED