வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாஞ்சி மணியாச்சி சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
சந்திப்பு (தொடருந்து) நிலையம்
VanchiManiyachiJunction.JPG
Name board at train station
இடம் ஒட்டந்தம்-மணியாச்சி சாலை, மணியாச்சி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
அமைவு 8°52′52″N 77°53′29″E / 8.8811°N 77.8913°E / 8.8811; 77.8913ஆள்கூற்று: 8°52′52″N 77°53′29″E / 8.8811°N 77.8913°E / 8.8811; 77.8913
உயரம் 70 metres (230 ft)
உரிமம் இந்திய இரயில்வே
இயக்குபவர் தென்னக இரயில்வே
நடைமேடை 4
இருப்புப் பாதைகள் 6
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை நிலையானது
தரிப்பிடம் உண்டு
மாற்றுத்திறனாளி அனுகல் Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலை செயல்படுகிறது
நிலையக் குறியீடு MEJ
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
ரயில்வே கோட்டம் மதுரை
பயணக்கட்டண வலயம் இந்திய இரயில்வே
மின்சாரமயம் இல்லை

வாஞ்சி மணியாச்சி சந்திப்பு (இந்தியத்தொடருந்து குறியீடு: MEJ) என்பது ஒரு இந்தியத் தொடருந்து சந்திப்பு நிலையமாகும். இது தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. தெற்கிலுள்ள திருநெல்வேலியையும், மேற்கிலுள்ள தூத்துக்குடியையும் இணைக்கிறது.

வரலாறு[தொகு]

விடுதலைப் போராட்ட வீரரான வாஞ்சிநாதனை நினைவூட்டும் வகையில் இப்பெயரை, இத்தொடருந்து நிலையத்திற்கு வைத்துள்ளனர். இந்த இடத்தில் தான், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ்துரை ( Robert William Escourt Ashe) வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார். [1] இந்தியாவின் 7 இரயில்வே மண்டலங்களுள் ஒன்றான, தென்மண்டல இரயில்வேயில் இது அடங்குகிறது. இத்தென்மண்டல இரயில்வேயிலுள்ள கோட்டங்களில், இது மதுரை இரயில்வே கோட்டத்தின் கீழ் அமைந்து, முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.

அட்டவணை[தொகு]

இத்தொடருந்து சந்திப்பில், அறுபதுக்கும் மேற்பட்ட வண்டிகள் வந்து செல்கின்றன. அவற்றினை பற்றிய விவரங்களை, இணையம் வழியாகவே நாம் காணும் வசதியை, தென்னக இரயில்வே செய்துள்ளது.இத்தொடுப்பின் வழியே முழுப்பட்டியலையும் காணலாம். இதிலுள்ள வசதியை இற்றைப்படுத்தி, சில நிமிடங்களுக்கு முன் தொகுத்த செய்திகளைத் தேவைப்படுபவர் காணும் நிரல்கட்டக அமைப்பைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்த வசதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Centenary of a historical assassination today". பார்த்த நாள் 14 July 2013.