செங்கோட்டை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செங்கோட்டை தொடருந்து நிலையம் தமிழ்நாடு-கேரளா எல்லையில், திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை நகரின் விசுவநாதபுரம் பகுதியில் உள்ளது. அருகிலுள்ள பேருந்து நிலையம் செங்கோட்டையில் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரத்தில் 110 கி.மீ. (68 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

செங்கோட்டை தொடருந்து நிலையம் நான்கு நடைமேடைகள் கொண்டது. இத்தொடருந்து நிலையத்திலிருந்து அன்றாடம் 11 தொடருந்துகள் புறப்பட்டுச் செல்கிறது. இரண்டு தொடருந்துகள் மட்டும் இந்நிலையத்தில் தங்கிச் செல்கிறது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, இராமேஸ்வரம், இராஜபாளையம், சிவகாசி போன்ற நகரங்களை செங்கோட்டை தொடருந்து நிலையம் இணைக்கிறது.[1][2]

செங்கோட்டையிலிருந்து கேரளாவிற்குச் செல்லும் குறுகிய இருப்புப்பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இப்பணி முடிந்த பின், ஆரியங்காவு, குளத்துப்புழை, புனலூர், எர்ணாகுளம், கொல்லம், கொச்சி நகரங்களை செங்கோட்டை தொடருந்து நிலையம் இணைக்கும்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sengottai Railway Station
  2. Kohilan, Subawarana, Sengottai Station - 10 Train Departures SR/Southern Zone - Railway Enquiry, https://indiarailinfo.com/departures/sengottai-sct/2926, பார்த்த நாள்: 2018-02-11 
  3. (in en) Kollam–Sengottai branch line - Wikipedia, https://en.m.wikipedia.org/wiki/Kollam%E2%80%93Sengottai_branch_line, பார்த்த நாள்: 2018-02-11 
  4. , Special Correspondent, Special Correspondent"Punalur-Shencotta line to be ready in May" (in en-IN), The Hindu, 2017-01-29, http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Punalur-Shencotta-line-to-be-ready-in-May/article17111878.ece, பார்த்த நாள்: 2018-02-11