கெலமங்கலம் தொடருந்து நிலையம்
கெலமங்கலம் | |
---|---|
இந்திய இரயில்வே தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | தமிழ்நாடு, கிருட்டிணகிரி மாவட்டம் இந்தியா |
ஆள்கூறுகள் | 12°36′56″N 77°51′55″E / 12.6155°N 77.8653°E |
ஏற்றம் | 804 மீட்டர்கள் (2,638 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வேயின் தென்மேற்கு தொடருந்து மண்டலம் |
தடங்கள் | சேலம்- பெங்களூர் வழித்தடம் தருமபுரி வழியாக |
நடைமேடை | 2 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | சாதாரண (தரையில் உள்ள நிலையம்) |
தரிப்பிடம் | ஆம் |
மற்ற தகவல்கள் | |
நிலை | பயன்பாட்டில் |
நிலையக் குறியீடு | KMLM |
மண்டலம்(கள்) | தென்மேற்கு தொடருந்து மண்டலம் |
கோட்டம்(கள்) | பெங்களூர் |
வரலாறு | |
மின்சாரமயம் | ஆம் |
கெலமங்கலம் தொடருந்து நிலையம் (Kelamangalam railway station) என்பது ஒசூர் தொடருந்து நிலையத்திற்கும், தருமபுரி தொடருந்து நிலையத்திற்கும் இடையிலான பாதையின் இடைப்பட்ட தொடர்ந்து நிலையங்களில் ஒன்றாகும். [1]
தொடருந்து நிலையம்
[தொகு]சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் முதல் பெங்களூர் நகர சந்திப்பு தொடருந்து நிலையம் வரையிலான தொடருந்து பாதையில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. [2] இந்த தொடருந்து பாதை மின்மயமாக்கப்படாத ஒற்றைப் பாதையாகும். கெலமங்கலம் தொடருந்து நிலையம் ஓசூர் தொடருந்து நிலையத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது பயணிகள் தொடருந்துகள் மட்டுமே நின்று செல்லும் நிலையமாகும். இங்கு விரைவு தொடருந்துகள் நிற்பதில்லை. இந்த நிலையம் தென் மேற்கு ரயில்வேயைச் சேர்ந்த நிலையமாகும். இதன் அருகில் உள்ள தொடருந்து நிலையமாக பெரிய நாகதுனை தொடருந்து நிலையம் உள்ளது. இதன் அருகில் உள்ள பெரிய தொடருந்து நிலையங்கலாக பெங்களூர் நகர சந்திப்பு, ஒசூர் தொடர்ந்து நிலையம் ஆகியவை உள்ளன.
சுற்றுலா தலங்கள்
[தொகு]கெலமங்கலத்திற்கு அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்
கெலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த செலவில் அருகிலுள்ள இடங்களுக்குச் செல்வதற்காக பயணிகள் தொடர்ந்து போக்குவரத்தைத் தேர்வு செய்கின்றனர். இந்த பயணிகள் தொடருந்து போக்குவரத்தின் மூலம் ஒசூர், தருமபுரியிலிருந்து பெங்களூருக்கு செல்ல தொழிலாளிகள் தினமும் பயன்படுத்துகின்றனர். இந்த பயணிகள் தொடருந்தில் காய்கறிகள், பழங்கள், சில வீட்டுத் தேவைப் பொருட்கள் விற்பனை செய்வதன் மூலம் சில குடும்பங்கள் வருமானம் ஈட்டுகின்றன.