கோவில்பட்டி தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 9°10′57″N 77°52′23″E / 9.1826°N 77.8731°E / 9.1826; 77.8731
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

கோவில்பட்டி தொடர்வண்டி நிலையம்
அனைத்து வகை ரயில்களும் நின்று செல்லும் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்வேலாயுதபுரம் ரோடு , கோவில்பட்டி , தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்9°10′57″N 77°52′23″E / 9.1826°N 77.8731°E / 9.1826; 77.8731
ஏற்றம்4 மீட்டர்
உரிமம்இந்திய ரயில்வே
இயக்குபவர்தென்னக ரயில்வே
தடங்கள்வாஞ்சி மணியாச்சி - மதுரை இருப்புப் பாதை
நடைமேடை2
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்வாடகையுந்து, மூவுருளி (Auto) மற்றும் சிற்றுந்துகள்
கட்டமைப்பு
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில் உள்ளது
நிலையக் குறியீடுCVP
இந்திய இரயில்வே வலயம் தென்னக ரயில்வே
இரயில்வே கோட்டம் மதுரை
மின்சாரமயம்ஆம்

கோவில்பட்டி தொடர்வண்டி நிலையம் (Kovilpatti railway station) , தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்துக்குட்பட்ட ஒரு தொடர்வண்டி நிலையம் ஆகும். இத்தொடர்வண்டி நிலையம் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது .

வரலாறு[தொகு]

தொடக்ககாலத்தில், கோவில்பட்டி தொடர்வண்டி நிலையம் நீராவி என்ஜின்களுக்கு நீரேற்ற பயன்படுத்தப்பட்டது. லாயல் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் லட்சுமி டெக்ஸ்டைல்ஸ் போன்ற நிறுவனங்களின் வருகையால் இந்நகரம் வளர்ச்சியடைந்தது.

தொடர்வண்டி சேவை[தொகு]

இத்தொடர்வண்டி நிலையம் மதுரையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், போன்ற தென்மாவட்டப் பகுதிகளை இணைக்கும் இருப்பு பாதையில் அமைந்துள்ளதால், அப்பகுதிகளுக்குச் செல்லும் பெரும்பாலான தொடர்வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.

அனைத்து வகை ரயில்களும் இங்கு நின்று செல்வதால், இத்தொடர்வண்டி நிலையம் மதுரை கோட்டத்தின் மிக முக்கிய தொடர்வண்டி நிலையங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.[1][2]

போன்ற நாட்டின் பல பகுதிகளுக்கு கோவில்பட்டி தொடர்வண்டி நிலையத்திலிருந்து தொடர்வண்டி சேவை உள்ளது .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statement showing Category-wise No.of stations in IR based on Pass. earning of 2011" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 January 2016.
  2. "PASSENGER AMENITIES - CRITERIA= For Categorisation Of Stations" (PDF). Archived from the original (PDF) on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2016.