பொள்ளாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொள்ளாச்சி
தொடருந்து நிலையம்
Pollachi junction station name board.jpg
பெயர் பலகை
இடம்இரயில் நிலையம் சாலை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
அமைவு10°39′10″N 77°00′04″E / 10.6529°N 77.0011°E / 10.6529; 77.0011ஆள்கூறுகள்: 10°39′10″N 77°00′04″E / 10.6529°N 77.0011°E / 10.6529; 77.0011
உயரம்290 மீட்டர்கள் (950 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
நடைமேடை3
இருப்புப் பாதைகள்5
இணைப்புக்கள்பேருந்து, ஆட்டோ ரிக்சா
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுPOY
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் பாலக்காடு
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது15 அக்டோபர் 1890; 130 ஆண்டுகள் முன்னர் (1890-10-15)
மூடப்பட்டது2009
மறுநிர்மாணம்2015
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
பொள்ளாச்சி is located in தமிழ் நாடு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
பொள்ளாச்சி is located in இந்தியா
பொள்ளாச்சி
பொள்ளாச்சி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

பொள்ளாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் (Pollachi junction railway station, நிலையக் குறியீடு:POY) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் தென்னக இரயில்வே மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.

வரலாறு[தொகு]

பொள்ளாச்சி சந்திப்பானது முதன்முதலில் 1850களில் தொடருந்து நிறுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது. 1900க்குப் பிறகு, இது பயணிகளுக்கான நிலையமாக பயன்படுத்தப்பட்டது.

முதல் சேவை 1915இல் பொள்ளாச்சி முதல் போத்தனூர் வரை மீட்டர் கேஜ் இரயில் பாதையாக தொடங்கியது. பின்னர் 2008 ஆம் ஆண்டில், திண்டுக்கல் - போத்தனூர் பாதை மாற்றத்திற்காக நிலையம் மூடப்பட்டது.[1]

நவம்பர் 25, 2014 அன்று, பொள்ளாச்சி - பழனி அகல இரயில் பாதையில், இரயில்வே பாதுகாப்பு ஆணையம், ஒரு வேக சோதனை மற்றும் ஆய்வை வெற்றிகரமாக முடித்தது. ஏழு ஆண்டுகள் கட்டுமானத்திற்குப் பிறகு, பொள்ளாச்சி சந்திப்பு - பழனி அகலப்பாதை, வணிக பயன்பாட்டிற்காக 9 சனவரி 2015 அன்று திறக்கப்பட்டது.[2]

1898 முதல் 2008 ஆம் ஆண்டில் மாற்றத்திற்காக மூடப்படும் வரை, பழைய மீட்டர் கேஜ் பாதையாக, 110 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது.

6 அக்டோபர் 2015 அன்று, இரயில்வே பாதுகாப்பு ஆணையம் வெற்றிகரமாக பாலக்காடு டவுன் - பொள்ளாச்சி சந்திப்பு வரை அகல இரயில் பாதையில், வேக சோதனை மற்றும் ஆய்வை முடித்தது. இரயில்வே பாதுகாப்பு ஆணையம் செய்த சோதனை ஓட்டத்தில், சிறப்பு தொடருந்து ஆனது, 38 நிமிடங்களில் 54 கி.மீ தூரம் சென்றது. இந்த வழித்தடம் வணிக பயன்பாட்டிற்காக 16 நவம்பர் 2015 அன்று திறக்கப்பட்டது.

24 மார்ச் 2017 அன்று, போத்தனூர் - பொள்ளாச்சி அகல இரயில் பாதையில், இரயில்வே பாதுகாப்பு ஆணையம், ஒரு வேக சோதனை மற்றும் ஆய்வை வெற்றிகரமாக முடித்தது.

வழித்தடங்கள்[தொகு]

இந்நிலையத்திலிருந்து மூன்று வழித்தடங்கள் பிரிந்து செல்கின்றன:

மேற்கோள்கள்[தொகு]