திருத்தங்கல் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருத்தங்கல் தொடருந்து நிலையம்
திருத்தங்கல்
பயணிகள் தொடருந்து & இலகு தொடருந்து நிலையம்
Tiruttangal Railway Station.jpg
இடம்திருத்தங்கல், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
அமைவு9°28′39″N 77°48′40″E / 9.4774°N 77.8110°E / 9.4774; 77.8110ஆள்கூறுகள்: 9°28′39″N 77°48′40″E / 9.4774°N 77.8110°E / 9.4774; 77.8110
உயரம்90 மீட்டர்கள் (300 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்விருதுநகர்செங்கோட்டை வழித்தடம்
நடைமேடை1
இருப்புப் பாதைகள்1
இணைப்புக்கள்வாடகையுந்து நிறுத்தம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உள்ளது
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுTTL
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1932; 87 ஆண்டுகளுக்கு முன்னர் (1932)
போக்குவரத்து
பயணிகள் (2013)1300–1500 (நாளொன்றுக்கு)

திருத்தங்கல் தொடருந்து நிலையம் (Tiruttangal railway station) தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்திலுள்ள, திருத்தங்கல் நகரில் அமைந்துள்ளது. இந்நிலையத்தின் குறியீடு TTL ஆகும்.

வரலாற்றுப் பின்புலம்[தொகு]

இத்தொடருந்து நிலையம் 1932 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் இத்தொடருந்து நிலையத்தை தெற்கு இருப்புப் பாதை மண்டலம் மூடுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியபோது ஊர்மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மூடும் முயற்சி கைவிடப்பட்டது.

ஆளுகைப் பகுதி[தொகு]

இந்தத் தொடருந்து நிலையம் தென்மண்டல இருப்புப் பாதைக்குட்பட்ட, மதுரை இருப்புப் பாதைப் பிரிவின் கீழ் இயங்குகிறது.[1]ஆகும்.

வழித்தடம்[தொகு]

இந்தத் தொடருந்து நிலையம் விருதுநகர் சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கும் தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையத்திற்கும் இடையே அமைந்துள்ளது.[2][3]

வசதிகள்[தொகு]

இந்தத் தொடருந்து நிலையம் அகல இருப்புப் பாதையாக மாற்றப்பட்ட பின்பு, நிதிநெருக்கடியினைக் காரணம் காட்டி அதன் நடைபாதையினை உயர்த்தும் பணியினை உரிய அதிகாரிகள் மேற்கொள்ளாத நிலையில், இந்நகர்வாசியான ஆர். சந்திரமோகன் நன்கொடையாக 30 இலட்சம் (US) வழங்கியதைக் கொண்டு பயணிகளுக்கான முக்கிய வசதிகள் செய்யப்பட்டன. மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சரக்கு அறை, குறிகாட்டிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் உருள் இருக்கைக்கான சாய்தளப் பாதை வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.[4]

அருகிலுள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]