அருப்புக்கோட்டை தொடருந்து நிலையம்
அருப்புக்கோட்டை இரயில் நிலையம் | |
---|---|
கண்ணோட்டம் | |
நிலை | செயற்பாட்டில் |
உரிமையாளர் | இந்திய இரயில்வே |
வட்டாரம் | தமிழ்நாடு |
இணையதளம் | www |
சேவை | |
வகை | விரைவு தொடருந்து பயணிகள் தொடருந்து |
செய்குநர்(கள்) | தென்னக இரயில்வே |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1 செப்டம்பர் 1963 |
தொழில்நுட்பம் | |
தட அளவி | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
பழைய அளவு | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) |
சுமையேற்ற அளவி | 4,725 mm × 3,660 mm (15 அடி 6.0 அங் × 12 அடி 0.1 அங்) (BG)[1] |
மின்மயமாக்கல் | பணிகள் நடைபெறுகின்றன |
இயக்க வேகம் | 80 km/h (50 mph) |
அருப்புக்கோட்டை இரயில் நிலையம் (Aruppukkottai railway station), அருப்புக்கோட்டையில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் உள்ள மானாமதுரை - விருதுநகர் இணைக்கிறது. இது மதுரை ரயில்வே கோட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.[2]
வரலாறு
[தொகு]மானாமதுரை சந்திப்பிலிருந்து-விருதுநகர் சந்திப்பிற்கு அருப்புக்கோட்டை வழியாக புதிய இரயில்வே பாதை மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் முன்மொழியப்பட்டது. இது ஏற்கனவே அமைந்துள்ள மானாமதுரை - மதுரை சந்திப்பு மற்றும் மதுரை - விருதுநகர் சந்திப்பு ஆகிய வழித் தடங்களுக்கிடையேயான நெரிசலைக் குறைக்கும் என கருதப்பட்டது.
1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் நாள், 22.66கி.மீ (14.08மைல்) தூரமுடைய விருதுநகர் சந்திப்பு - அருப்புக்கோட்டை பிரிவானது திறக்கப்பட்டு, அதே ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் கே.காமராசரால் அருப்புக்கோட்டை இரயில் நிலையமும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் மே 2, 1964 ல், 43.89 கிலோமீட்டர் (27.27 மைல்) தூரமுள்ள அருப்புக்கோட்டை-மானாமதுரை சந்திப்பு இருப்புப்பாதையானது போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு, மீட்டர் கேஜிலிருந்து அகல இரயில் பாதையாக மாற்றியமைத்தல் பொருட்டு இந்த இரயில் நிலையமானது மூடப்பட்டது.
15.07.2012 அன்று அருப்புக்கோட்டை இரயில் நிலையமானது அகல இரயில் பாதையாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.சி.வேணுகோபாலால் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.[3]
அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை தற்பொழுது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பாதை முடிவு அடையும் பொழுது அருப்புக்கோட்டை ரயில் நிலையம் அருப்புக்கோட்டை சந்திப்பு ரயில் நிலையமாக தரம் உயரும். [4]
06.03.2022 அன்று விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை 67 கி.மீ தொலைவிற்கு புதிய மின்சார ரயில் பாதை ஆய்வு செய்யப்பட்டு ரயில் போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது
இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட முதல் ரயில் பாதை.
சேவைகள்
[தொகு]திருச்சிராப்பள்ளி - விருதுநகர் வழி அருப்புக்கோட்டை (T.No.76837 / 76838), கன்னியாகுமரி-புதுச்சேரி விரைவுவண்டி மற்றும் சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு வண்டி வழி அருப்புக்கோட்டை எர்ணாகுளம் வேளாங்கண்ணி விரைவுவண்டி வழி அருப்புக்கோட்டை தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவுவண்டி[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ J S Mundrey (2010). Railway Track Engineering (Fourth ed.). New Delhi: Tata McGraw Hill. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-068012-8. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
- ↑ "Madurai Division System Map" (PDF). Southern Railway. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
- ↑ R. P. Saxena. "Indian Railway History Time line". Irse.bravehost.com. Archived from the original on 14 July 2012. பார்க்கப்பட்ட நாள் 5 February 2014.
- ↑ "madurai to tuticorin" (PDF). www.indianrailways.gov.in. indian railways.
- ↑ "Arrivals at APK/Aruppukkottai". IndiaRailInfo.