வேளச்சேரி தொடருந்து நிலையம்
வேளச்சேரி தொடருந்து நிலையம் (Velachery railway station) சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தைச் சார்ந்த வேளச்சேரியில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும்.
வரலாறு
[தொகு]19 நவம்பர் 2007 அன்று வேளச்சேரி தொடருந்து நிலையம் செயல்பட துவங்கியது. வேளச்சேரி தொடருந்து நிலையமானது சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இடையே ஒரு எல்லை போல் செயல்படுகிறது.
அமைவிடம்
[தொகு]இங்கு உள்ள நடைமேடையின் நீளம் 280 மீட்டர் ஆகும்.[1] தொடருந்து நிலைய வளாகத்தில் 12,250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட திறந்தவெளி வாகன நிறுத்த வசதி உள்ளது.[2] தொடருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீ தொலைவில் (வேளச்சேரி) விஜயநகரம் பேருந்து நிலையம் உள்ளது. அங்கிருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு பேருந்தில் செல்லலாம்.
போக்குவரத்து
[தொகு]இந்த நிலையத்தில் இருந்து பூங்கா நகர் வரை தொடர்வண்டியில் செல்லலாம். பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், மைலாப்பூர் வழியாக சென்னை சென்ட்ரல்(பூங்கா நகர்) நிலையத்தை அடையலாம்.
படங்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "MRTS Phase-II Extension". Development of MRTS in Chennai. CMDA. Archived from the original on 15 ஆகஸ்ட் 2014. Retrieved 20 Aug 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ R.Ramanathan. "Presentation on MRTS & Rail facilities in and around Chennai" (PDF). Traffic Transportation and Parking - Session 2. CMDA, Chennai. Retrieved 19 August 2012.