உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகங்கை தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவகங்கை
தொடருந்து நிலையம்
சிவகங்கை தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில்வே நிலையம் சாலை, சிவகங்கை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்9°51′20″N 78°30′03″E / 9.855427°N 78.500853°E / 9.855427; 78.500853
ஏற்றம்103.5 மீட்டர்கள் (340 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்மானாமதுரை - காரைக்குடி வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்வாடகையுந்து நிறுத்தம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுSVGA
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) மதுரை
வரலாறு
திறக்கப்பட்டதுசூலை 1, 1930 (1930-07-01)
மறுநிர்மாணம்2008 (2008)
மின்சாரமயம்இல்லை

சிவகங்கை தொடருந்து நிலையம் (Sivaganga railway station, நிலையக் குறியீடு:SVGA) இந்தியாவின், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், மதுரை கோட்டத்தின் கீழ் இயங்குகிறது.[1]

அமைவிடம்

[தொகு]

சிவகங்கை தொடருந்து நிலையம் ஆனது, சிவகங்கை நகரத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம், மானாமதுரை - காரைக்குடி வழித்தடத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இயக்கப்படும் விரைவுத் தொடருந்துகளும் மற்றும் நீண்ட தூரம் செல்லும் விரைவுத் தொடருந்துகளும், இந்நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன.

சிவகங்கை மதுரை கோட்டத்தில் உள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாக இருந்தாலும், இந்நிலையத்தில் 3 நடைமேடைகள் மட்டுமே உள்ளன.

இந்நிலையத்திற்கு அருகிலுள்ள வானூர்தி நிலையமான, மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்நகரிலிருந்து 50 கி.மீ தொலைவில் மேற்கே அமைந்துள்ளது.[2] இந்நிலையத்திற்கு தெற்கே மேலக்கொன்னக்குளம் தொடருந்து நிலையமும், வடக்கு பனங்குடி தொடருந்து நிலையமும் அமைந்துள்ளது.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சிவகங்கை ரயில் நிலையத்தில் மூடிக்கிடக்கும் கழிப்பறை".தினமலர் (திசம்பர் 31, 2015)
  2. https://www.airport-technology.com/projects/madurai-international-airport/

வெளி இணைப்புகள்

[தொகு]