நீல வழித்தடம் (சென்னை மெட்ரோ)
தோற்றம்
சென்னை மெட்ரோ முதல் திட்டத்தின் இரண்டு தடங்களில் நில தடம் அல்லது தடம் 1 ஆகும். இரண்டாவது தடம் பச்சை வழித்தடம். முதல் தடமானது சென்னை பன்னாட்டு வானுர்தி நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரையிலும் பின்னர் விம்கோ நகருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 25 மெட்ரோ நிலையங்கள் உள்ளன, அதில் 17 நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 8 மெட்ரோ நிலையங்கள் விரிவாக்கத்தில் உள்ளது. 17 நிலையங்களில் 11 நிலையங்கள் தரைக்கடியிலும் மற்றும் 6 நிலையங்கள் உயர் பாலத்தில் அமைந்துள்ளது.
வரைபடம்
[தொகு]
நிலையங்கள்
[தொகு]நீல வழித்தடம்
[தொகு]இந்த தடம் நகரின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு முனைகளை இணைக்கும் நிலையங்களை கொண்டுள்ளன.
| நீலக்கோடு | |||||
|---|---|---|---|---|---|
| எண் | நிலையத்தின் பெயர் | இணைப்புகள் | தளவமைப்பு | திறக்கப்பட்டது | |
| ஆங்கிலம் | தமிழ் | ||||
| 1 | Washermanpet | வண்ணாரப்பேட்டை | எதுவுமில்லை | நிலத்தடி | 10 பிப்ரவரி 2019 |
| 2 | Mannadi | மண்ணடி | எதுவுமில்லை | நிலத்தடி | 10 பிப்ரவரி 2019 |
| 3 | High Court | உயர் நீதிமன்றம் | எதுவுமில்லை | நிலத்தடி | 10 பிப்ரவரி 2019 |
| 4 | Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central | புரட்சி தலைவர் டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ | பச்சை வழித்தடம் | நிலத்தடி | 10 பிப்ரவரி 2019 |
| 5 | Government Estate | அரசினர் தோட்டம் | எதுவுமில்லை | நிலத்தடி | 10 பிப்ரவரி 2019 |
| 6 | LIC | எல்ஐசி | எதுவுமில்லை | நிலத்தடி | 10 பிப்ரவரி 2019 |
| 7 | Thousand Lights | ஆயிரம்விளக்கு | எதுவுமில்லை | நிலத்தடி | 10 பிப்ரவரி 2019 |
| 8 | AG – DMS | ஏஜி-டிஎம்எஸ் | எதுவுமில்லை | நிலத்தடி | 25 மே 2018 |
| 9 | Teynampet | தேனாம்பேட்டை | எதுவுமில்லை | நிலத்தடி | 25 மே 2018 |
| 10 | Nandanam | நந்தனம் | எதுவுமில்லை | நிலத்தடி | 25 மே 2018 |
| 11 | Saidapet | சைதாப்பேட்டை | எதுவுமில்லை | நிலத்தடி | 25 மே 2018 |
| 12 | Little Mount | சின்னமலை | எதுவுமில்லை | உயர்த்தப்பட்டது | 21 செப்டம்பர் 2016 |
| 13 | Guindy | கிண்டி | உயர்த்தப்பட்டது | 21 செப்டம்பர் 2016 | |
| 14 | Arignar Anna Alandur | அறிஞர் அண்ணா ஆலந்தூர் | பச்சை வழித்தடம் | உயர்த்தப்பட்டது | 29 சூன் 2015 |
| 15 | Nanganallur Road | நங்கநல்லூர் சாலை | எதுவுமில்லை | உயர்த்தப்பட்டது | 21 செப்டம்பர் 2016 |
| 16 | Meenambakkam | மீனம்பாக்கம் | உயர்த்தப்பட்டது | 21 செப்டம்பர் 2016 | |
| 17 | Chennai International Airport | சென்னை சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம் | எதுவுமில்லை | உயர்த்தப்பட்டது | 21 செப்டம்பர் 2016 |