உள்ளடக்கத்துக்குச் செல்

கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 10°59′47″N 76°58′02″E / 10.996365°N 76.967222°E / 10.996365; 76.967222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோயம்புத்தூர் ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோயம்புத்தூர் சந்திப்பு
தொடருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்ஸ்டேட்பேங்க் சாலை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்10°59′47″N 76°58′02″E / 10.996365°N 76.967222°E / 10.996365; 76.967222
ஏற்றம்411.2 மீட்டர்கள் (1,349 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
நடைமேடை6
இருப்புப் பாதைகள்20
இணைப்புக்கள்பேருந்து, வாடகையுந்து
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுCBE
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1861; 163 ஆண்டுகளுக்கு முன்னர் (1861)
மின்சாரமயம்ஆம்
பயணிகள்
பயணிகள் தோராயமாக 1,00,000/ஒருநாளைக்கு
அமைவிடம்
கோயம்புத்தூர் சந்திப்பு is located in தமிழ் நாடு
கோயம்புத்தூர் சந்திப்பு
கோயம்புத்தூர் சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
கோயம்புத்தூர் சந்திப்பு is located in இந்தியா
கோயம்புத்தூர் சந்திப்பு
கோயம்புத்தூர் சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

கோயம்புத்தூர் சந்திப்பு (Coimbatore Junction, நிலையக் குறியீடு:CBE) கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள முதன்மை தொடருந்து நிலையம் ஆகும். இந்நிலையத்தில் ஆறு நடைமேடைகள் உள்ளன. சுமார் 20 இரும்பு பாதைகளை உடைய தென்னிந்தியாவின் பெரிய இரயில் நிலையங்களுல் ஒன்றாகும்.

இதன் பெயரில் சந்திப்பு என்று இருந்தாலும் தொழில்நுட்பரீதியாக இங்கு தொடருந்து பாதைகள் எதுவும் சந்திப்பதோ பிரிவதோ இல்லை. உண்மையான சந்திப்புகள் கோவை வடக்கு சந்திப்பு (2.6 கி.மீ வடக்கே), போத்தனூர் (5.8 கிமீ தெற்கே) மற்றும் இருகூர்(16 கிமீ கிழக்கே). கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து செல்லும் வழித் தடங்களில் கோயம்புத்தூர்- மதுரை மட்டும் 'மீட்டர் கேஜ்'-லிருந்து 'பிராட் கேஜ்' (அகலப் பாதையாக) மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. பிற தடங்கள் முன்னரே அகலப்பாதையாக மாற்றப்பட்டுவிட்டன.

வரலாறு

[தொகு]

கோவையின் முதல் இரயில்நிலையமாக போத்தனூர் சந்திப்பே செயல்பட்டு வந்தது. பின் போத்தனூர் வழித்தடம் கோயம்புத்தூர் இரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டது. பின் கோவை - மேட்டுப்பாளையம் பாதையில் (கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு வழியாக) நீட்டிக்கப்பட்டது.[1]

வசதிகள்

[தொகு]

நடைமேடை 1 மற்றும் 2 இல் உணவு வளாகங்கள் அமைந்துள்ளன. 1,2,3,4 நடைமேடைகளில் உணவுக்கடைகள் உள்ளன. நடைமேடை 1 மற்றும் 2இல் தங்கும் அறைகள் உள்ளன, நடைமேடை 1 மற்றும் 2 இறுதியில் பழக்கடையும் உண்டு.

நடைமேடை 1-4களில் பல தேநீர் மற்றும் பால் கடைகளும் தொலைபேசி சிற்றறைகளும் உள்ளன. நிலையத்தின் முகப்பிலும் இவை உள்ளன. நுழைவாயிலருகே இணைய உலாவுமையமும் உள்ளது.

வருமானம்

[தொகு]

கோவை சந்திப்பு நிலையம் மட்டுமே ஆண்டொன்றிற்கு ரூ.3,859 மில்லியன் ஈட்டுகிறது. இது கோட்ட வருமானத்தில் 45% ஆகும். மேலும் சேலம் கோட்டத்திலேயே கோவை முதன்மையான ரயில் நிலையமாகும்.

முக்கிய புறப்படும் விரைவுவண்டிகள்

[தொகு]
வண்டி எண். வண்டி பெயர் சேரும் இடம் பிரிவு இயக்கம் புறப்படும் நேரம்
12673/12674 சேரன் விரைவுவண்டி சென்னை அதிவேக விரைவுவண்டி தினமும் 22:20
12671/12672 நீலகிரி விரைவுவண்டி சென்னை அதிவேக விரைவுவண்டி தினமும் 20:55
12675/12676 கோவை விரைவுவண்டி சென்னை அதிவேக விரைவுவண்டி தினமும் 14:20
12679/12680 நகரிடை விரைவுவண்டி சென்னை அதிவேக விரைவுவண்டி தினமும் 06:15
12243/12244 டுரன்டோ விரைவுவண்டி சென்னை டுரன்டோ செவ்வாய் தவிர 15:20
12681/12682 சென்னை விரைவுவண்டி சென்னை அதிவேக விரைவுவண்டி வாரந்தோறும் 23:45
16609/16610 நாகர்கோவில் விரைவுவண்டி நாகர்கோவில் விரைவுவண்டி தினமும் 20:30
12083/12084 ஜனசதாப்தி விரைவுவண்டி மயிலாடுதுறை ஜனசதாப்தி செவ்வாய் தவிர 07:00
16615/16616 செம்மொழி விரைவுவண்டி நீடாமங்கலம் விரைவுவண்டி தினமும் 23:55
11013/11014 குர்லா விரைவுவண்டி லோகமான்ய திலக் மும்பை விரைவுவண்டி தினமும் 08:45
12626/12627 கொங்கு விரைவுவண்டி நிஜாமுதீன் (தில்லி) அதிவேக விரைவுவண்டி வாரந்தோறும் 14:15
12969/12970 ஜெய்பூர் விரைவுவண்டி செய்ப்பூர் அதிவேக விரைவுவண்டி வாரந்தோறும் 09:20
16613/16614 இராஜ்கோட் விரைவுவண்டி இராஜ்கோட் விரைவுவண்டி வாரந்தோறும் 23:45
22609/22610 நகரிடை விரைவுவண்டி மங்களூரு அதிவேக விரைவுவண்டி தினமும் 06:20
22616/22615 நகரிடை விரைவுவண்டி திருப்பதி அதிவேக விரைவுவண்டி வாராந்திர நான்கு முறை 06:00
16857/16857 மங்களூரு சென்ட்ரல் புதுச்சேரி விரைவு வண்டி சனி, ஞாயிறு 00.35
22475/22476 குளிர் சாதன விரைவுவண்டி பிகனிர் அதிவேக விரைவுவண்டி வாரந்தோறும் 15:20

முக்கிய புறப்படும் பயணிகள் வண்டி

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இந்திய இரயில் தகவல்கள்". பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச்சு 2015.