போத்தனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போத்தனூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 13 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

போத்தனூர் (ஆங்கிலம்:Pothanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,967 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். போத்தனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போத்தனூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாற்றுப் பழமை[தொகு]

  • சங்க காலப் புலவர் குன்றூர் கிழார் மகனார் என்பவர் இவ்வூரைப் போந்தை என்று குறிப்பிடுகிறார். இவ்வூர் காவிரியாற்றின் வடகரையில் பரமத்தி வேலூருக்கு மேற்கில் உள்ளது. இவ்வூரின் நெல்வளத்தையும், செல்வ வளத்தையும் பாடல் பெரிதுபடுத்திப் பேசுகிறது. இவ்வூரில் சங்க காலத்தில் வாழ்ந்த பெருமகன் நெடுவேள் ஆதன். இவ்வூரில் ஓரெயில் என்று போற்றப்பட்ட கோட்டையில் இந்த ஆதன் வாழ்ந்துவந்தான். வேம்பு, ஆர், போந்தை மாலை சூடிய மூவேந்தர் ஆயினும் இவனைப் பணிந்து பெண் கேட்க வேண்டுமாம். இன்றேல் பெண் தரமாட்டானாம்.
அடிப்படைச் சான்று[தொகு]
  • புறநானூறு 338

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.


"https://ta.wikipedia.org/w/index.php?title=போத்தனூர்&oldid=1461743" இருந்து மீள்விக்கப்பட்டது