போத்தனூர் (கோயம்புத்தூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

போத்தனூர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை நகரின் தெற்கே உள்ள ஒரு சிறு நகரமாகும். இந்நகரம் நிறைய இரயில் பணியாளர்களையும், பஞ்சாலை மற்றும் பல தொழிற்சாலை பணியாளர்களையும் கொண்டுள்ளது. அருகில் குறிச்சி நகரம், குனியமுத்தூர் நகரம், வெள்ளலூர் கிராமம், செட்டிபாளையம் கிராமம் ஆகியவற்றை அருகே கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

பாலக்காட்டு கணவாய்-யின் குளிர்ந்த காற்று நிரம்ப கிடைக்க பெறுவதால் ஆங்கிலேயர்கள் இதை ஏழைகளின் ஊட்டி என்று அழைத்தனர். அதனால் அவர்கள் தங்கள் காலனியையும் கோவையின் முதல் இரயில் நிலையத்தையும் இங்கு அமைத்தனர். இரயில் நிலையம் மட்டுமல்லாது கேரளா மற்றும் கொங்கு தேசத்திற்கான இரயில் கோட்டமாகவும் நிறுவப்பட்டது. கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு இரயில் நிலையங்கள் கட்டப்பட்ட பின்னர் போத்தனூர் இரயில் நிலையம் அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. இருப்பினும், இன்றும் இது ஒரு முக்கியமான ரயில் சந்திப்பாக கருதப்படுகிறது. இரயில்வேயின் தகவல் மற்றும் தொலைதொடர்பு பணிமனை, எவரெஸ்ட் கூரைகள், G.D Weiler, சந்திரிகா சோப்பு கம்பனி மற்றும் பல சிறு, குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளது.

மருத்துவமனைகள்[தொகு]

  • 1. GD மருத்துவமனை
  • 2. ரயில் மருத்துவமனை
  • 3. புனித மேரி மருத்துவமனை

பிரபலங்கள்[தொகு]

  • அதாம் சின்ச்ளைர் - இந்தியன் ஹாக்கி அணி
  • V.Z.துரை - முகவரி படத்தின் இயக்குனர்