அரக்கோணம் சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரக்கோணம் ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அரக்கோணம் சந்திப்பு
Arakkonam Junction
இந்திய இரயில்வே நிலையம்
இடம் அரக்கோணம், தமிழ்நாடு, இந்தியா
அமைவு 13°04′55″N 79°40′06″E / 13.08191°N 79.66845°E / 13.08191; 79.66845ஆள்கூற்று: 13°04′55″N 79°40′06″E / 13.08191°N 79.66845°E / 13.08191; 79.66845
உரிமம் ரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள் மும்பை - சென்னை வழித்தடத்தில், குண்டக்கல் - சென்னை எழும்பூர் பிரிவு
சென்னை சென்ட்ரல் - பெங்களூர் வழித்தடத்தில், சென்னை எழும்பூர்-விருத்தாச்சலம் பிரிவு
நடைமேடை 8
இருப்புப் பாதைகள் 8
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை உயரத்தில்
தரிப்பிடம் உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு AJJ
பயணக்கட்டண வலயம் இந்திய இரயில்வே
மின்சாரமயம் உண்டு
சேவைகள்
ஏ.டி.எம், பொருட்கள் வைக்கும் அறை, தங்கும் அறை
அமைவிடம்
அரக்கோணம் ரயில் நிலையம் is located in Tamil Nadu
அரக்கோணம் ரயில் நிலையம்
அரக்கோணம் ரயில் நிலையம்
Location in Tamilnadu

அரக்கோணம் சந்திப்பு என அழைக்கப்படும் அரக்கோணம் ரயில் நிலையம், அரக்கோணத்தின் ரயில் போக்குவரத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. இங்கு அதிவிரைவு ரயில்களைத் தவிர, அனைத்து ரயில்களும் நின்று செல்கின்றன. இங்கிருந்து சென்னைக்கு புறநகர் ரயில்களும் இயக்கப்படுகின்றன.மேலும் சென்னை கடற்கரை-எழும்பூர்-கிண்டி-தாம்பரம்-கூடுவாஞ்சேரி-மறைமலைநகர்-செங்கல்பட்டு-வாலாஜாபாத்-காஞ்சிபுரம்-திருமால்பூர்-தக்கோலம்-அரக்கோணம்-கடம்பத்தூர்-திருவள்ளூர்-ஆவடி-பெரம்பூர்-ஜீவா-இராயபுரம்-சென்னை கடற்கரை என இணைத்து வட்ட இருப்பு பாதையாக 191 கிமீ இணைக்கும் திட்டம் விரைவில் தொடங்க பணிகள் நடைபெற்று கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சென்னை - பெங்களூரு - கோயம்புத்தூர், திருப்பதி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை நாளொன்றுக்கு நூறுக்கும் அதிகமான ரயில்கள் கடந்து செல்கின்றன.

இது எட்டு நடைமேடைகளைக் கொண்டது. மூன்றாம், நான்காம் நடைமேடைகளை சென்னைப் புறநகர் ரயில்களில் செல்வோர் பயன்படுத்துகின்றனர். முதலாம், இரண்டாம் நடைமேடைகளை சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

ரயில்கள்[தொகு]

இங்கிருந்து செல்லும் ரயில்களின் பட்டியலை கீழே காணவும்.

ரயிலின் எண். பெயர் வகை சேரும் இடம் வழி
56261 அரக்கோணம் - பெங்களூர் பயணியர் ரயில் பயணிகள் ரயில் (நாள் தோறும்) பெங்களூர் நகரம் ஜோலார்பேட்டை
16085 அரக்கோணம் - ஜோலார்பேட்டை விரைவுவண்டி விரைவுவண்டி (நாள் தோறும்) ஜோலார்பேட்டை காட்பாடி
56011 அரக்கோணம் - கடப்பா பயணியர் ரயில் பயணிகள் ரயில் (நாள்தோறும்) கடப்பா ரேணிகுண்டா

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

1. http://indiarailinfo.com/departures/428/0?t=11&s=0&kkk=1371297586278

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரக்கோணம்_சந்திப்பு&oldid=2569445" இருந்து மீள்விக்கப்பட்டது