திருவனந்தபுரம் தொடருந்து கோட்டம்
| கண்ணோட்டம் | |
|---|---|
| தலைமையகம் | திருவனந்தபுரம், கேரளா, இந்தியா |
| வட்டாரம் | கேரளா,தமிழ்நாடு |
| செயல்பாட்டின் தேதிகள் | 2 அக்டோபர் 1979–தற்போது வரை |
| முந்தியவை | தென் இந்திய ரயில்வே கம்பெனி |
| Other | |
| இணையதளம் | www |
திருவனந்தபுரம் இரயில்வே கோட்டம் என்பது இந்தியாவின் தென்னக இரயில்வேயின் கீழுள்ள ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். இதனுடைய தலைமையகம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]திருவனந்தபுரம் இரயில்வே கோட்டமானது, ஒலவக்காடு கோட்டத்திலிருந்து ஷொறணூர், கொச்சின் துறைமுகம் பிரிவு மற்றும் மதுரை கோட்டத்திலிருந்து எர்ணாகுளம்-திருவனந்தபுரம்-கன்னியாகுமரி பிரிவு ஆகியவை பிரிக்கப்பட்டு 1979-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் உருவாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் காயங்குளம்-கொல்லம் வழித்தடமானது 1996-ம் ஆண்டு இருவழித்தடமாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் கொல்லம்-திருவனந்தபுரம் வழித்தடம் 2000-ம் ஆண்டு இருவழித்தடமாக்கப்பட்டது. இக்கோட்டத்தின் எர்ணாகுளம்-திருவனந்தபுரம் வழித்தடமானது 2006-ம் ஆண்டு மின்மயமாக்கப்பட்டது.[1]
தொடருந்து நிலையங்களின் போக்குவரத்து மற்றும் பயணிகள் வருவாய் விவரங்கள்
[தொகு]| தரவரிசை | தொடருந்து நிலையம் | மாவட்டம் | பகுதிகள் | மொத்த பயணிகள் (2018–19) |
பயணச்சீட்டு வருவாய் (2018–19) |
|---|---|---|---|---|---|
| 1 | திருவனந்தபுரம் | திருவனந்தபுரம் | கேரளம் | 1,42,92,407 | ₹1,93,14,10,719 |
| 2 | எர்ணாகுளம் சந்திப்பு | எர்ணாகுளம் | கேரளம் | 93,39,152 | ₹1,53,68,38,174 |
| 3 | திருச்சூர் சந்திப்பு | திருச்சூர் | கேரளம் | 67,81,646 | ₹1,08,50,11,153 |
| 4 | எர்ணாகுளம் நகரம் | எர்ணாகுளம் | கேரளம் | 43,47,498 | ₹66,70,06,491 |
| 5 | கொல்லம் சந்திப்பு | கொல்லம் | கேரளம் | 84,99,151 | ₹67,45,38,284 |
| 6 | ஆலுவா | எர்ணாகுளம் | கேரளம் | 42,20,114 | ₹63,55,44,911 |
| 7 | கோட்டயம் | கோட்டயம் | கேரளம் | 44,96,3200 | ₹57,22,27,243 |
| 8 | நாகர்கோவில் சந்திப்பு | கன்னியாகுமரி | தமிழ்நாடு | 26,92,661 | ₹50,68,49,949 |
| 9 | வர்க்கலா | திருவனந்தபுரம் | கேரளம் | 25,58,898 | ₹46,51,06,837 |
| 10 | கன்னியாகுமரி | கன்னியாகுமரி | தமிழ்நாடு | 31,24,766 | ₹35,49,84,400[2][3] |
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
[தொகு]இரட்டைப் பாதை
[தொகு]- 26 ஜீலை 2025 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, சென்னை-கன்னியாகுமரி வழித்தடத்தின் எஞ்சிய ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் சந்திப்பு (12.87 கிலோ மீட்டர்), திருநெல்வேலி-மேலப்பாளையம் (3.6 கிலோ மீட்டர்) பிரிவுகளின் இரட்டை ரயில் பாதைத் திட்டம், ₹650 கோடி மதிப்பினில் திருவனந்தபுரம்-கன்னியாகுமரி தொடருந்து பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் 21 கிலோ மீட்டர் தூர நாகர்கோவில் டவுன்-கன்னியாகுமரி பிரிவின் இரட்டைப்பாதையை நாட்டிற்கு அர்பணித்தார்.[4]
சென்னை - குமரி, தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடையிலான போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தும். கூடுதலாக, பயண நேரத்தைக் குறைக்கும். மேலும் பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் திறனை மேம்படுத்துவதன் மூலம் பிராந்தியப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்.
அமிர்த பாரத் நிலைய மேம்பாடு திட்டங்கள்
[தொகு]அமிர்த பாரத் நிலைய திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 1275 நிலையங்களுள் திருவனந்தபுரம் கோட்டத்தில் பின்வரும் தமிழ்நாட்டு நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.[5]
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.sr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,1,263,579,584
- ↑ "Annual originating passengers & earnings for the year 2018-19 (Thiruvananthapuram Division)". Southern Railway. http://www.sr.indianrailways.gov.in/uploads/files/1583930511824-ANNUAL%20EARNINGS.pdf. பார்த்த நாள்: 2019-12-10.
- ↑ "Annual originating passengers & earnings for the year 2017-18 (Palakkad Division)". Southern Railway. https://sr.indianrailways.gov.in/uploads/files/1525083000550-New%20Categories%20of%20Stations-PGT.pdf. பார்த்த நாள்: 2019-12-10.
- ↑ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148969
- ↑ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980