போளூர் வட்டம்
போளூர் | |
---|---|
வருவாய் வட்டம் | |
ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை மாவட்டம் |
அரசு | |
• வருவாய் கோட்டம் | ஆரணி வருவாய் கோட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,51,655 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN-97 |
போளூர் வட்டம் (Polur Taluk), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டத்தில் ஒன்றாகவும் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக போளூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 111 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]
போளூர் வட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 2012-இல் கலசப்பாக்கம் வட்டம் மற்றும் சமுனாமரத்தூர் வட்டம் மற்றும் சேத்துப்பட்டு வட்டம் உருவாக்கப்பட்டது.
போளூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
உள்வட்டம்
[தொகு]இந்த வட்டத்தில் ஐந்து உள்வட்டங்கள் அமைந்துள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 2,51,655 ஆகும். அதில் 1,25,827 ஆண்களும், 1,25,128 பெண்களும் உள்ளனர். 68766 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 86.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [2] இவ்வட்டத்தின் எழுத்தறிவு 71.74% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 997பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50222 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 917 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 78,138 மற்றும் 35,230 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 94.02%, இசுலாமியர்கள் 2.35%, கிறித்தவர்கள் 3.32%, சமணர்கள் 0.17% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[3]
வருவாய் கிராமங்கள்
[தொகு]இந்த வட்டத்தில் 111 வருவாய் கிராமங்கள் உள்ளன.[4]