உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரணி வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரணி
துணை மாவட்டம்
சம்புவராயர் மாவட்டம்

ஆரணி மாவட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு

மாவட்டம்

திருவண்ணாமலை

தலைநகரம்

ஆரணி
பகுதி வட மாவட்டம்
ஆட்சியர்
திரு. முருகேஷ்,
இ. ஆ. ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

திரு. அ. பவன் குமார்
ரெட்டி, இ. கா. ப
துணை ஆட்சியர் திருமதி.தனலட்சுமி இ.ஆ.ப
காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.கோட்டீஸ்வரன் இ.கா.ப
நகராட்சிகள் 1
வருவாய் கோட்டங்கள் 1
வட்டங்கள் 4
பேரூராட்சிகள் 3
ஊராட்சி ஒன்றியங்கள் 6
ஊராட்சிகள் 260
வருவாய் கிராமங்கள் 295
சட்டமன்றத் தொகுதிகள் ஆரணி, போளூர், கலசப்பாக்கம்
மக்களவைத் தொகுதிகள் ஆரணி
பரப்பளவு 1440.06 ச.கி.மீ
மக்கள் தொகை
7,87,656 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இசீநே
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
632301
தொலைபேசிக் குறியீடு
04173
வாகனப் பதிவு
TN-97
பாலின விகிதம்
989 /
கல்வியறிவு
74.21%
இணையதளம் Arani[தொடர்பிழந்த இணைப்பு]

ஆரணி வருவாய் கோட்டம் (ஆங்கிலம்:Arani Revenue Devision) இந்திய நாட்டில், தமிழ்நாட்டிலுள்ள, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இந்த வருவாய் கோட்டத்தை 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆரணி வருவாய் கோட்டம் ஆகும். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆரணியில் அமைந்துள்ளது.

வருவாய் நிர்வாக வசதிக்காக திருவண்ணாமலை வருவாய் கோட்டம் மற்றும் செய்யாறு வருவாய் கோட்டம் ஆகிய வருவாய் கோட்டங்களை மறுசீரமைத்து புதிதாக ஆரணி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வருவாய் கோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர் ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் முதலமைச்சர் திரு. எடப்பாடி க. பழனிசாமிஅவர்களால் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது[1].

மக்கள்தொகை[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த வருவாய் கோட்டத்தின் மொத்த மக்கள்தொகை 7,34,203 பேர் உள்ளனர். இவற்றில் ஆண்கள் 3,66,435 பேரும் மற்றும் பெண்கள் 3,67,068 பேரும் உள்ளனர்.[1]

நிர்வாகம்[தொகு]

இந்த ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், ஜமுனாமத்தூர் ஆகிய தாலுக்காக்கள் அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் கோட்டமாக இந்த ஆரணி வருவாய் கோட்டம் விளங்குகிறது.

வருவாய் கிராமங்கள்[தொகு]

வ.எண் வட்டம் மக்கள் தொகை ஆண்கள் பெண்கள் வருவாய் கிராமங்கள் வருவாய் கோட்டம்
1. ஆரணி 2,94,976 1,46,822 1,48,154 55 ஆரணி
2. போளூர் 2,51,655 1,25,827 1,25,128 111 ஆரணி
3. கலசப்பாக்கம் 1,40,301 69,150 71,151 52 ஆரணி
4. சமுனாமரத்தூர் 47,271 24,636 22,635 42 ஆரணி
5 சேத்துப்பட்டு 1,46,806 72,403 74,400 76 ஆரணி
மொத்தம் 8,81,009 4,38,841 4,41,468 336 ஆரணி

[[2]]

வருவாய் கோட்டத்தின் தகவல்கள்[தொகு]

  • வருவாய் கோட்டத்தின் பரப்பளவு : 1440.09 ச.கிமீ
  • வருவாய் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள் : 4
  • வருவாய் கோட்டத்தின் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை: 235
  • கிராம நிர்வாக அலுவலர்களின் எண்ணிக்கை: 220
  • இந்த வருவாய் கோட்டத்தில் உள்ள உள்வட்டங்கள்: 15
  • வருவாய் கோட்டத்தின் மக்கள்தொகை

மொத்தம்: 7,34,203

ஆண்கள்: 3,66,435

பெண்கள்: 3,67,068

சான்றுகள்[தொகு]

1.ஆரணி வருவாய் கோட்டம் குறித்த தமிழ் நாடு அரசாணை

2. திருவண்ணாமலை மாவட்ட வருவாய் கோட்டங்கள்

  1. புதிய ஆரணி வருவாய் கோட்டம் அறிவிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_வருவாய்_கோட்டம்&oldid=3904305" இலிருந்து மீள்விக்கப்பட்டது