சேத்துப்பட்டு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேத்துப்பட்டு வட்டம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வருவாய் வட்டம், ஆரணி வட்டத்தின் தென்பகுதிகளைக் கொண்டு, மே 2012ல் நிறுவப்பட்டது. [2]இவ்வருவாய் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் சேத்துப்பட்டில் செயல்படுகிறது. இவ்வட்டம் 76 வருவாய் கிராமங்கள் கொண்டது.[3]

இவ்வட்டத்தில் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேத்துப்பட்டு பேரூராட்சி உள்ளது. இந்த வட்டம் போளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

அமைவிடம்[தொகு]

சேத்துப்பட்டு வட்டத்தின் வடக்கில் ஆரணி வட்டம், கிழக்கில் வந்தவாசி வட்டம், தெற்கில் விழுப்புரம் மாவட்டம், மேற்கில் போளூர் வட்டம், தென்மேற்கில் கலசப்பாக்கம் வட்டம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் வட்டங்கள் எல்லைகளாக உள்ளது.

சேத்துப்பட்டு, மாவட்டத் தலைமையிடம் திருவண்ணாமலையிலிருந்து 46 கிமீ தொலைவிலும்; சென்னையிலிருந்து 137 கிமீ தொலைவிலும் உள்ளது.

வருவாய் கிராமங்கள்[தொகு]

சேத்துப்பட்டு வருவாய் வட்டத்தில் 76 வருவாய் கிராமங்கள் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்
  2. Kilpennathur to become 11th taluk of Tiruvannamalai district
  3. சேத்துப்பட்டு வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புக்ள்[தொகு]