உள்ளடக்கத்துக்குச் செல்

தானிப்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானிப்பாடி என்பது தமிழ் நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் , தண்டராம்பட்டு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

திருவண்ணாமலை - சேலம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மிக முக்கிய இடமாகும்.

தண்டராம்பட்டு வட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாகும். தண்டராம்பட்டை விட இங்கு மக்கள் தொகை அதிகமாக உள்ளது.

தானிப்பாடியில் இருக்கும் கோண மலையில் கார்த்திகை தீப திருநாள் அன்று ஆண்டுதொறும் தீபம் ஏற்றப்படுகிறது. அன்னதானமும் வழங்கப்படுகிறது

சாத்தனூர் அணைக்கு வேப்பூர் செக்கடி வழியாக காட்டுப் பாதையில் செல்லலாம்.சாலை வழியாக சென்றால் 25 கீ.மீ தொலைவில் உள்ளது. ஆனால் அணைக்கு இப்பாதையில் சென்றால் 12 கீ.மீ தொலைவில் செல்லலாம். தானிப்பாடி மக்கள் அதிகமாக இப்பாதையையே தேர்ந்தெடுக்கின்றனர்

இங்கிருந்து 9 கீ.மீ தொலைவில் கொளமஞ்சனூர் கிராமத்தில் பிக்கப் டேம் உள்ளது

தானிப்பாடியில் இருந்து ஆத்திப்பாடி செல்லும் வழியில் உள்ள ஆவாரங்கல் மலையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது

தானிப்பாடியில் இருந்து 13 கீ.மீ தொலைவில் பீமாரப்பட்டி கிராமத்தில் அருவி உள்ளது.

தானிப்பாடியில் இருந்து 15 கீ.மீ தொலைவில் புளியம்பட்டியில் இருந்து ஆத்திப்பாடி செல்லும் வழியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் venco research & breeding farm என்னும் கோழிப்பண்ணை உள்ளது

புளியம்பட்டி கிராமத்தில் அரசு தோட்டக்கலை பண்ணை அமைந்துள்ளது.

ஏகலைவன் அரசு உண்டு உறைவிட பள்ளி புளியம்பட்டியில் அமைந்துள்ளது.

போக்குவரத்து


1. திருவண்ணாமலை 32 கீ.மீ தொலைவில் உள்ளது. (தண்டராம்பட்டு வழியாக)

2. அரூர் 55 கீ‌.மீ தொலைவில் உள்ளது. (நரிப்பள்ளி, தீர்த்தமலை வழியாக)

3. கள்ளக்குறிச்சி 55 கீ.மீ தொலைவில் உள்ளது. (பெருங்களத்தூர், சங்கராபுரம் வழியாக)

4. சேலம் 110 கீ.மீ தொலைவில் உள்ளது. (1. நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சிட்டிங், தும்பல், வாழப்பாடி 2. நரிப்பள்ளி தீர்த்தமலை அரூர் வழியாக)

5. சங்கராபுரம் 35 கீ.மீ தொலைவில் உள்ளது. (போந்தை, பெருங்களத்தூர், சர்லூர் கூட்ரோடு வழியாக)

6. தீர்த்தமலை 32 கீ.மீ தொலைவில் உள்ளது. (மோத்தக்கல், நரிப்பள்ளி, பையர்நாயக்கன்பட்டி கூட்ரோடு, முல்லைவனம் வழியாக)

7. ஆத்தூர் 92 கீ.மீ தொலைவில் உள்ளது. (நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சிட்டிங், தும்பல், தண்டானூர் வழியாக)

8. செங்கம் 40 கீ.மீ தொலைவில் உள்ளது. (மலமஞ்சனூர், தண்டராம்பட்டு, வீராணம், சாத்தனூர், குப்பந்தாங்கல், புதுக்குளம் வழியாக)

9. மூங்கில்துறைப்பட்டு 20 கீ.மீ தொலைவில் உள்ளது. (போந்தை, P.குயிலம், பெருங்களத்தூர், சவேரிப்பாளையம் வழியாக)


சுற்றியுள்ள இடங்களுக்கான போக்குவரத்துகள்


1. தண்டராம்பட்டு 17 கீ.மீ தொலைவில் உள்ளது.(1. அரசமரம், மலமஞ்சனூர், கொளமஞ்சனூர், 2. போந்தை, நா.குப்பம், தே.குப்பம், கொளமஞ்சனூர் வழியாக)

2. மோத்தக்கல் 12 கீ.மீ தொலைவில் உள்ளது. (ரெட்டியார் பாளையம், மலையனூர் செக்கடி, கூட்டார் வழியாக)

3. பீமாரப்பட்டி 15 கீ.மீ தொலைவில் உள்ளது. (ரெட்டியார் பாளையம், மலையனூர் செக்கடி, மேட்டுப்பாளையம், குருகிலாமூர் வழியாக)

4. வேப்பூர் செக்கடி 7 கீ.மீ தொலைவில் உள்ளது. (செ.ஆண்டாப்பட்டு, T.வேலூர் வழியாக)

5. பெருங்களத்தூர் 12 கீ.மீ தொலைவில் உள்ளது. (போந்தை, P.குயிலம் வழியாக)

6. புளியம்பட்டி 15 கீ.மீ தொலைவில் உள்ளது (1. சின்னியம் பேட்டை, உடையார் குப்பம் வழியாக 2. போந்தை, அருவங்காடு, புதூர் செக்கடி வழியாக)

7. புதூர் செக்கடி 12 கீ.மீ தொலைவில் உள்ளது. (போந்தை, அருவங்காடு, புதூர் செக்கடி வழியாக)

8. நரிப்பள்ளி 18 கீ.மீ தொலைவில் உள்ளது. (1. ரெட்டியார் பாளையம், மலையனூர் செக்கடி, கூட்டார், மோத்தக்கல் வழியாக 2. ரெட்டியார் பாளையம், மலையனூர் செக்கடி, கூட்டார், குபேரப்பட்டனம் வழியாக)

9. ஆத்திப்பாடி 14 கீ.மீ தொலைவில் உள்ளது (1. சின்னியம்பேட்டை, முனியப்பன் கோவில், சொன்னானாம் பட்டி வழியாக 2.ரெட்டியார் பாளையம், மலையனூர் செக்கடி, மல்காபூர் வழியாக)

10. மேல்பாச்சார் 12 கீ.மீ தொலைவில் உள்ளது. (ரெட்டியார் பாளையம், மலையனூர் செக்கடி, கூட்டார், கீழ்பாச்சார் வழியாக)

11. நாரயணகுப்பம் 5 கீ.மீ தொலைவில் உள்ளது. (போந்தை வழியாக)

12. சாத்தனூர் அணை 25 கீ.மீ தொலைவில் உள்ளது. (மலமஞ்சனூர், தண்டராம்பட்டு, மல்லிகாபுரம் வழியாக) (இரு சக்கர வாகனங்கள் வேப்பூர் செக்கடி வழியாக காட்டுப் பாதையில் செல்லலாம்)

மக்கள் தொகை[தொகு]

தானிப்பாடி யின் மக்கள் தொகை ஏறக்குறைய 10,000 ஆயிரம் ஆகும் .

மக்கள் கோரிக்கை[தொகு]

80 ஆண்டுகால , "தானிப்பாடி" தனி தாலுக்கா கோரிக்கை , "தண்டராம்பட்டை" தலமைவிடமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானிப்பாடி&oldid=3532232" இலிருந்து மீள்விக்கப்பட்டது