தேவிகாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவிகாபுரம்
DEVIKAPURAM
பெரிய நாயகி கோவில் நகரம்
தேர்வு நிலை பேரூராட்சி
Devikapuram back view.jpg
தேவிகாபுரம் is located in தமிழ் நாடு
தேவிகாபுரம்
தேவிகாபுரம்
தேவிகாபுரம் is located in இந்தியா
தேவிகாபுரம்
தேவிகாபுரம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 12°29′44″N 79°15′14″E / 12.4954759°N 79.2539086°E / 12.4954759; 79.2539086ஆள்கூறுகள்: 12°29′44″N 79°15′14″E / 12.4954759°N 79.2539086°E / 12.4954759; 79.2539086
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்ஆரணி
சட்டமன்றத் தொகுதிஆரணி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
நிர்மாணித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைதேர்வு நிலை பேரூராட்சி
 • Bodyதேவிகாபுரம் பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு. சேவூர் இராமச்சந்திரன்
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு[1]
 • மொத்தம்72 km2 (28 sq mi)
பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்8,712
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
இந்தியாவில் தொலைபேசி எண்கள்91-4181
வாகனப் பதிவுTN 97
ஊராட்சி ஒன்றியம்ஆரணி
சென்னையிலிருந்து தொலைவு159 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு47 கி.மீ
போளூரிலிருந்து தொலைவு17 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு22 கிமீ
வந்தவாசியிலிருந்து தொலைவு41 கிமீ
வேலூரிலிருந்து தொலைவு59 கிமீ
இணையதளம்தேவிகாபுரம் பேரூராட்சி

தேவிகாபுரம் (ஆங்கிலம்: Devikapuram) மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது ஆரணி (சட்டமன்றத் தொகுதிக்கும்) மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இது போளூர் - சென்னை நெடுஞ்சாலையில் போளூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் மற்றும் ஆரணியிலிருந்து 22 கிமீ தொலைவிலும் உள்ளது.

திருவண்ணாமலை கோயிலுக்கு அடுத்த நிலையில், நீண்ட நெடிது உயர்ந்த கோபுரங்களுடனும், ஈடு இணையற்ற சிற்ப எழில் கொஞ்சும் நீண்ட நெடிய மதில்களுடனும் காட்சி தரும் மாட்சிமை உடையது இத்திருத்தலமாகும்.

தேவிகாபுரம் கோயில்

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8,712 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 4,353 ஆண்கள், 4,359 பெண்கள் ஆவார்கள். தேவிகாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 74.08% ஆகும். கொட்டாரம் மக்கள் தொகையில் 13.44% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

பெயர்க்காரணம்[தொகு]

தேவிகாபுரம் என்பது கல்வெட்டுகளில் தேவக்காபுரம் என்று காணப்படுகிறது. ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் பல்குன்றக் கோட்டத்துமேல் குன்ற நாட்டு இராஜகம்பீரன் மலையை அடுத்த முருகமங்கலம் பற்றைச் சார்ந்த தேவக்காபுரம் என்பது கல்வெட்டு வாசகமாகும்.

பண்டைய நாளில் இறைவன் எழுந்தருளிய இடமெல்லாம் நறுமணங்கமழும் சோலைகள் சூழ்ந்த பகுதியாக விளங்கின, அதனால் அப்பகுதியில் உள்ள கோவில்கள் அச்சோலைகளின் பொருளைக் குறிக்கும் சான்றாக திருவானைக்கா, திருக்கோலக்கா, திருக்கோடிகா, திருநெல்லிகா என்னும் திருத்தலங்களின் பெயர்களை இங்கு நோக்கத்தக்கது. இதுபோன்று தேவன் எழுந்தருளிய கா தேவக்கா என வழங்கப்படுகிறது. பின்னர் அதனுடன் புரம் என்ற சொல் சேர்ந்து தேவிகாபுரம் என்று மருவியது எனக்கூறலாம்.

தனிப்பெரும் ஆலயத்துள் தேவி எழுந்தருளி இருந்து அருள்பாலித்து வருவதால் தேவி காத்தருளும் புரம் என்ற பொருளில் தேவிகாபுரம் என்று வழங்குகிறது எனக் கொள்ளினும் அதுவும் பொருந்துவதே ஆகும்.

கோயில்கள்[தொகு]

Devikapuram Periyanayagi amman temple.jpg
தேவிகாபுரம் திருவிழா 1
தேவிகாபுரம் திருவிழா 2

தேவிகாபுரத்தில் அமைந்துள்ள கோயில்கள்:

பட்டு நெசவு[தொகு]

பார் போற்றும் பட்டு‍ நெசவுத் தொழிலில் தேவிகாபுரத்து‍ மக்கள் ஈடுபட்டிருந்தனர் என்பது‍ பெரியநாயகியம்மன்‌ கோயில் கல்வெட்டுகளில் இருந்து‍ தெரியவருகிறது. கோயில் கல்வெட்டு‍ எண் பட்டாடை நூலாயம் மற்றும் தறிவரி என்ற வரிகளைப்பற்றிய செய்தியும் உள்ளன. இதன் படி‍ ஊரில் இருந்த ஒவ்வொரு‍ தறியும் கோயிலுக்கு‍ ஆண்டுக்கு‍ ஒன்றரை பணம் வரியாகத் தரவேண்டும் என்று‍ குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து‍ இவ்வூரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு‍ மேலாக பட்டு‍ நெசவு மற்றும் கைத்தறி தொழிலில் சிறந்து‍ விளங்கியது‍ என்பது‍ தெரியவருகிறது.

பட்டடை நூலாயம் என்பது‍ பட்டறை நூலாயம் என்றும் பொருள் கொள்ளலாம் என்று‍ கல்வெட்டு‍ அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் படி‍ பட்டறை என்பது‍ ஒரு‍ குறிப்பிட்ட தொழில் ஒரே இடத்தில் அதிக அளவில் மேற்கொள்வது‍ என்று‍ பொருள்படும். எனவே, தேவிகாபுரத்தில் பட்டாடை உற்பத்தி அல்லது‍ நூல் உற்பத்தி பெருமளவில் நடந்து‍ வந்துள்ளது‍ என்று‍ தெரியவருகிறது.

தேவிகாபுரத்திலுள்ள கைத்தறி

போர்ச்சுகீசியர்களின் துறைமுகமான சென்னைக்கு‍ அடுத்துள்ள புலிகாட் (பழவேற்காடு) துறைமுகத்திற்குத்‍ தேவிகாபுரத்தில் இருந்து‍ நெய்யப்பட்ட துணிகள் ஏற்றுமதிக்கு‍ அனுப்பப்பட்டதாகவும் அங்கு‍ சாயப்பட்டறைகள் இருந்தாகவும் வரலாற்று‍ ஆவணங்களில் சில குறிப்புகள் உள்ளன. கைக்கோளர் என்ற பிரிவினர் தறி நெய்துவந்தனர் என்பதும் கோயில் நிர்வாகத்தில் பங்கேற்றனர் என்பதும் ‍ தேவிகாபுரம் கல்வெட்டுகளில் மட்டுமல்லாமல் வேறு‍ பல ஊர்களில் உள்ள கல்வெட்டுகளிலும் குறி்ப்பிடப்பட்டுள்ளன. பட்டு‍ நெசவு இன்றும் இவ்வூரில் முக்கியத் தொழிலாகவும் வாழ்வாதாரமாகவும் இருந்து‍ வருகிறது. ஒரு‍ காலத்தில் கைக்கோளர் என்ற செங்குந்தர் மட்டுமே செய்து‍ வந்த இத்தொழில் காலப்போக்கில் அனைத்து‍ பிரிவினரும் இத்தொழிலைக் கற்று‍ செய்து‍ வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு‍ முன்னர் இவ்வூரில் நூல்சேலைகள், காடா துணிகள், லுங்கிகள் போன்றவை நெய்து‍ அவற்றை நெய்தவர்களே பல ஊர்களுக்கு‍ சென்று‍ விற்று‍ வந்தனர். இதில் வருமானம் குறைவாகவும் உழைப்பு அதிகமாகவும் இருந்ததால் பின்னர் அனைவருமே பட்டு‍ நெசவுக்கு‍ மாறிவிட்டனர். பட்டு‍ நெசவு என்பது‍ குறைந்த மூலதனம் அதிக உழைப்பு அதிக லாபம்‌ என்ற வணிக அமைப்பு உடையது. பட்டு‍ நெசவுத் தொழிலில் நட்டம் என்பது‍ தறி நெய்பவர்களுக்கு‍ என்றுமே கிடையாது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). பார்த்த நாள் 21 June 2017.
  2. http://census2001.tn.nic.in/pca2001.aspxRural - Tiruvannamalai District;Arani Taluk;Devikapuram Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவிகாபுரம்&oldid=2850625" இருந்து மீள்விக்கப்பட்டது