தாரமங்கலம்
தாரமங்கலம் | |
— நகராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
வட்டம் | ஓமலூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | செ. கார்மேகம், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
30,222 (2011[update]) • 3,109/km2 (8,052/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 9.72 சதுர கிலோமீட்டர்கள் (3.75 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/tharamangalam |
தாரமங்கலம் (ஆங்கிலம்:Tharamangalam), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மேலும் இவ்வூரில் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்பங்களுக்கு புகழ்பெற்றது.


2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்[தொகு]
16 அக்டோபர் 2021 அன்று தாரமங்கலத்தை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]
அமைவிடம்[தொகு]
தாரமங்கலம் நகராட்சிக்கு கிழக்கே சேலம் 25 கிமீ; மேற்கே மேட்டூர் 30 கிமீ; வடக்கே மேச்சேரி 20 கிமீ; தெற்கே சங்ககிரி 29 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சி அமைப்பு[தொகு]
9.72 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 152 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். தாரமங்கலம் பேரூராட்சியானது 24.8.2021 அன்று தமிழக அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[6]
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,406 வீடுகளும், 30,222 மக்கள்தொகையும், கொண்டது.[7]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
- ↑ தாரமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Tharamangalam Population Census 2011
வெளி இணைப்புகள்[தொகு]