கங்கவள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கங்கவள்ளி
—  பேரூராட்சி  —
கங்கவள்ளி
இருப்பிடம்: கங்கவள்ளி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°29′N 78°39′E / 11.48°N 78.65°E / 11.48; 78.65ஆள்கூறுகள்: 11°29′N 78°39′E / 11.48°N 78.65°E / 11.48; 78.65
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் கங்கவள்ளி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் S.A ராமன், இ. ஆ. ப. [3]
சட்டமன்றத் தொகுதி கங்கவள்ளி
சட்டமன்ற உறுப்பினர்

மருதமுத்து (தேமுதிக)

மக்கள் தொகை

அடர்த்தி

12,015 (2011)

1,848/km2 (4,786/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

6.5 சதுர கிலோமீட்டர்கள் (2.5 sq mi)

292 மீட்டர்கள் (958 ft)

இணையதளம் www.townpanchayat.in/gangavalli

கங்கவள்ளி (ஆங்கிலம்:Gangavalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் கங்கவள்ளி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

கங்கவள்ளி பேரூராட்சி, சேலத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் மேற்கே 15 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது. இதன் வடக்கில் கள்ளக்குறிச்சி 50 கிமீ; தெற்கில் துறையூர் 60 கிமீ; கிழக்கில் பெரம்பலூர் 45 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

6.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 49 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,124 குடும்பங்களும், 12,015 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.50% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1034 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°29′N 78°39′E / 11.48°N 78.65°E / 11.48; 78.65 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. கங்கவள்ளி பேரூராட்சியின் இணையதளம்
  5. Gangavalli Population Census 2011
  6. "Gangavalli". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கவள்ளி&oldid=2742108" இருந்து மீள்விக்கப்பட்டது