வாழப்பாடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாழப்பாடி வட்டம் என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் வாழப்பாடியில் உள்ளது. வாழப்பாடி வட்டம் 64 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. [2]

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 195,412 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 98,681 ஆண்களும், 96,731 பெண்களும் உள்ளனர். 50,954 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 76% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 73.09% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 980 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20093 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 52,370 மற்றும் 10,655 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.25%, இசுலாமியர்கள் 1.04% , கிறித்தவர்கள் 1.64%, மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழப்பாடி_வட்டம்&oldid=2729294" இருந்து மீள்விக்கப்பட்டது