சேலம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேலம் வட்டம் என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக சேலம் நகரம் உள்ளது. சேலம் வட்டம் 59 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது .[2]

இவ்வட்டத்தில் பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

12 பிப்ரவரி 2014 அன்று சேலம் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு சேலம் தெற்கு வட்டம் மற்றும் சேலம் மேற்கு வட்டம் என இரண்டு வட்டங்கள் நிறுவப்பட்டது. [3]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒருங்கிணைந்த சேலம் வட்டம், சேலம் தெற்கு வட்டம் மற்றும் சேலம் மேற்கு வட்டம் ஆகியவற்றின் மொத்த மக்கள்தொகை 12,72,743 ஆகும். மக்கள்தொகையில் 644,713 ஆண்களும், 628,030 பெண்களும் உள்ளனர். 3,32,749 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 17.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 79.59% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 974 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,24,312 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 941 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 176,400 மற்றும் 12,080 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.7%, இசுலாமியர்கள் 5.2%, கிறித்தவர்கள் 1.78% மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-14. பார்க்கப்பட்ட நாள் 2011-08-25.
  2. சேலம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
  3. 23 new taluks created in Tamil Nadu
  4. வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_வட்டம்&oldid=3556043" இலிருந்து மீள்விக்கப்பட்டது