கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 14 கிராம ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2] மேட்டூர் வட்டத்தில் உள்ள் இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொளத்தூரில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 76,458 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 11,464 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 7,994 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 14 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

 1. சம்பள்ளி
 2. கருங்கல்லூர்
 3. காவேரிபுரம்
 4. ஆலமரத்துப்பட்டி
 5. சித்திரைப்ப்பட்டிபுதூர்
 6. தின்னப்பட்டி
 7. கண்ணாமூச்சி
 8. லக்கம்பட்டி
 9. பாலமலை
 10. பண்ணவாடி
 11. சிங்கிரிப்பட்டி
 12. மூலக்காடு
 13. நவப்பட்டி
 14. கோல்நாயக்கன்பட்டி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25.
 3. SALEM DISTRICT Census 2011
 4. கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்